வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்டில் இளம் சூப்பர் ஸ்டார் ஆக வலதுகை வேகப்பந்து வேச்சாளர் ஷமர் ஜோசப் உருவெடுத்து இருக்கிறார். இவரது அதிரடியான வேகப்பந்துவீச்சு மற்றும் கடைசி கட்டத்தில் இவர் விளையாடக்கூடிய அதிரடியான முறைக்கு வெஸ்ட் இண்டீஸில் ரசிகர் கூட்டம் உருவாகி இருக்கிறது. இந்த நிலையில் சிறந்த பேட்ஸ்மேன் மற்றும் சிறந்த பந்துவீச்சாளர் குறித்தான கேள்விக்கு அவர் பதில் அளித்து இருக்கிறார்.
வாழ்க்கையில் அடிமட்டத்தில் இருந்த பொழுதும் கூட, கிரிக்கெட் மீது இருந்த காதலால் தொடர்ந்து விளையாடி வந்த ஷமர் ஜோசப் கிரிக்கெட் அனலைசர் பிரசன்னா மூலமாக கரீபியன் டி20 லீக்கில் முதல் முறையாக வாய்ப்பைப் பெற்று தன்னை நிரூபித்தார். அங்கிருந்து அவருடைய கிரிக்கெட் வாழ்க்கை மிகவும் ஏறு முகத்தில் இருக்கிறது.
இந்த ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கு ஆஸ்திரேலியா சென்றது. சர்வதேச கிரிக்கெட்டில் முதல் முறையாக பந்து வீசிய ஷமர் ஜோசப் முதல் பந்திலேயே ஸ்டீவ் ஸ்மித் விக்கெட்டை கைப்பற்றினார். மேலும் அறிமுகப் போட்டியில் அவருக்கு ஐந்து விக்கெட்டுகளும் கிடைத்தது. ஆனாலும் அந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் தோற்றது.
இதற்கு அடுத்து இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஷமர் ஜோசப் அனல் பறக்கும் வேகப் பந்துவீச்சை வெளிப்படுத்தி இரண்டு இன்னிங்ஸ்களிலும் ஐந்து விக்கெட்டுகளுக்கு மேல் கைப்பற்றி ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அவர்களது நாட்டில் சரித்திர வெற்றி பெறுவதற்கும் முக்கிய வீரராக இருந்தார். இதன் காரணமாக அவர் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்டில் இளம் சூப்பர் ஸ்டாராக உருவெடுத்திருக்கிறார்.
இந்த நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு முன்பாக அவரிடம் சில கேள்விகள் முன்வைக்கப்பட்டன. அதில் சிறந்த பேட்ஸ்மேன் விராட் கோலியா, ஸ்டீவ் ஸ்மித்தா? என்கின்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. இது ஒரு கடினமான கேள்வி என்று கூறிய அவர் நீண்ட நேரம் யோசித்து ஸ்டீவ் ஸ்மித்தை தேர்வு செய்தார்.
இதையும் படிங்க : தோனி விராட் ரோகித் கிடையாது.. எனக்கு பிடிச்ச கேப்டன் இவர்தான் – பும்ரா ஓபன் பேட்டி
இதே போல் அவரிடம் பும்ராவின் யார்க்கரா? அல்லது ஜோப்ரா ஆர்ச்சரின் துல்லியமான பவுன்சரா?என்ற கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த அவர் உம்ராவின் யார்க்கர் பந்துகளுக்கு தான் பெரிய ரசிகன் என்றும், அது ஆர்ச்சரின் பவுன்சரை விட சிறப்பான ஒன்று எனவும் கூறியிருக்கிறார். இந்த நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிராக வெஸ்ட் இண்டீஸ் அணி இன்று மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.






