தோனி விராட் ரோகித் கிடையாது.. எனக்கு பிடிச்ச கேப்டன் இவர்தான் – பும்ரா ஓபன் பேட்டி

0
517
Bumrah

இந்திய கிரிக்கெட் அணியில் ஏதாவது ஒரு வடிவத்திற்கு பும்ரா கேப்டனாக கொண்டு வரப்படுவார் என்று ஆரம்பத்தில் இருந்து எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவருக்கு சரியாக ஓய்வு கொடுக்க வேண்டும் என்பதற்காக தற்பொழுது அப்படியான முடிவு எடுக்கப்படவில்லை. இந்த நிலையில் அவர் விளையாடிய கேப்டன்களில் அவருக்கு பிடித்த கேப்டன் யார்? என்ற கேள்வி அவரிடம் கேட்ட பொழுது வித்தியாசமான பதில் ஒன்றை கூறி இருக்கிறார்.

பும்ரா முதல்முறையாக ஐபிஎல் தொடருக்கு ரோகித் சர்மா கேப்டன் பொறுப்பின் கீழ் வந்தார். பிறகு அவர் மகேந்திர சிங் தோனி வழிகாட்டுதலுக்குள் இந்திய அணிக்குள் சென்றார். விராட் கோலியின் தலைமையின் கீழ் அவர் முதல் முறையாக டெஸ்ட் கிரிக்கெட் அணிக்குள் வந்தார். இப்படி மூன்று திறமையான வெவ்வேறு விதமான கேப்டன்களின் கீழ் அவர் விளையாடியிருக்கிறார்.

- Advertisement -

தற்போது தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர் கேட்கப்பட்ட பல கேள்விகளுக்கும் மனம் திறந்து வெளிப்படையாக பேசியிருக்கிறார். இதில் அவருக்கு அவர் விளையாடிய கேப்டன்களில் யாரை பிடிக்கும் என்பது குறித்தான கேள்வி கேட்கப்பட்ட பொழுது, மிக தைரியமாக ஒரு பதிலை கூறி இருக்கிறார்.

இதுகுறித்து பும்ரா பேசும் பொழுது “எனக்கு பிடித்த கேப்டனாக எப்பொழுதும் நானே இருக்கிறேன். நான் சில போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டு இருக்கிறேன். வெளிப்படையாகச் சிறந்த கேப்டன்கள் இருக்கிறார்கள். ஆனால் நான் என்னுடைய பெயரையே கூறிக் கொள்ளப் போகிறேன்.நான்தான் எனக்குப் பிடித்த கேப்டன்.

- Advertisement -

ரோகித் சர்மாவிடம் கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது. அவர் எப்படி கேப்டனாக உருவெடுத்தார் எப்படி தவறுகளில் இருந்து கற்றுக் கொண்டார்? என நிறைய பார்க்கலாம்.மேலும் அவர் மற்றவர்களின் கருத்துக்கு இடம் கொடுத்தார். அதிலிருந்து தேவையானதை பில்டர் செய்து எடுத்துக் கொண்டார். நான் தலைமையின் கீழ் நீண்ட நாட்களாக விளையாடியதற்கு நன்றி உள்ளவனாக இருக்கிறேன்.

இதையும் படிங்க : 234 ஸ்ட்ரைக் ரேட்.. மேக்ஸ்வெல் ருத்ரதாண்டவம்.. பைனலில் வாஷிங்டன்.. சிஎஸ்கேயின் டிஎஸ்கே அணிக்கு புது சவால்

ரோகித் சர்மா தன்னுடைய அணியில் சீனியர் ஜூனியர் என்று யாரையும் பிரித்து நடத்துவது கிடையாது. மேலும் இது தங்களுடைய அணி இல்லை என்று எவரையும் நினைக்க விடமாட்டார். எல்லோரையும் அணியின் ஒரு முக்கிய அங்கம் என்று உணர வைப்பார். கேப்டனாக அவரிடம் சிறந்தது இது” எனக் கூறியிருக்கிறார்.

- Advertisement -