டி20 உ.கோ.. இந்த 4 டீம்தான் அரையிறுதிக்கு போகும்.. ஆப்கான் உள்ளே ஆஸி வெளியே- லாரா கணிப்பு

0
4245
Lara

இன்னும் சில நாட்களில் ஜூன் இரண்டாம் தேதி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டிஸ் நாடுகளில் ஐசிசி நடத்தும் டி20 உலகக்கோப்பை தொடர் துவங்க இருக்கிறது. இந்த உலகக் கோப்பை தொடரில் எந்த நான்கு அணிகள் அரை இறுதிக்கு தகுதி வரும் என்று பிரையன் லாரா கணித்திருக்கிறார்.

இந்த முறை நடக்க இருக்கும் டி20 உலகக் கோப்பை தொடரில் மொத்தம் 20 அணிகள் பங்கு பெறுகின்றன. இந்த 20 அணிகளும் ஒவ்வொரு குழுக்களுக்கு ஐந்து அணிகள் வீதம் நான்கு பிரிவுகளாக பிரிக்கப்படுகிறது.

- Advertisement -

இதில் ஒவ்வொரு குழுவில் இருக்கும் ஐந்து அணிகளும் தங்கள் குழுவில் இருக்கும் மற்ற அணிகளுடன் ஒருமுறை மோதுகின்றன. இதன் முடிவில் ஒவ்வொரு குழுவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் எட்டு சுற்றுக்கு தகுதி வருகின்றன.

இந்த சூப்பர் எட்டு சுற்றில், ஒரு குழுவுக்கு இரண்டு அணிகள் வீதம் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்படுகிறது. இதிலும் ஒவ்வொரு அணியும் தன் குழுவில் இருக்கும் மற்ற மூன்று அணிகளுடன் ஒரு முறை மோதுகின்றன. இதன் முடிவில் இரண்டு குழுவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் நான்கு அணிகள் அரையிறுதிக்கு தகுதி வருகின்றன. அதிலிருந்து இறுதிப் போட்டிக்கான தேர்ந்தெடுக்கப்பட்டு சாம்பியன் அணி உருவாகிறது.

தற்பொழுது பிரையன் லாரா அதிரடியாக நடக்க இருக்கும் டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு இந்தியா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆப்கானிஸ்தான் அணி தகுதி பெறும் என்று கணித்திருக்கிறார். ஆஸ்திரேலியா நியூசிலாந்து தென் ஆப்பிரிக்கா பாகிஸ்தான் ஆகிய பெரிய அணிகளை அவர் புறக்கணித்து ஆச்சரியப்படுத்தி இருக்கிறார்.

- Advertisement -

இதையும் படிங்க : ஸ்டார்க்கை விட 45 மடங்கு சம்பளம் குறைவு.. இங்க எல்லாம் ஒரு மாயை – ரிங்கு சிங் ஓபன் பேட்டி

இதில் சி பிரிவில் நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், ஆப்கானிஸ்தான் என மூன்று அணிகளும் இடம் பெற்று இருக்கின்றன. இதிலிருந்து வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிதான் சூப்பர் எட்டு சுற்றுக்கு செல்லும் என அவர் கணித்திருக்கிறார். இதன் மூலம் நியூசிலாந்து அணியை ஆப்கானிஸ்தான் அணி தோற்கடிக்கும் எனவும் அவர் நம்புகிறார். வெஸ்ட் இண்டீஸ் நிலைமைகளை வைத்து பிரையன் லாரா இவ்வாறு கணித்திருப்பது பலரையும் ஆச்சரியப்பட வைத்திருக்கிறது!