இந்தியா டி20 தொடர்.. ஜிம்பாப்வே அணி அறிவிப்பு.. பாகிஸ்தான் வழி வீரர் சேர்ப்பு.. 5 முக்கிய வீரர்கள் நீக்கம்

0
11406
Zimbabwe

இந்திய இளம் அணி ஜிம்பாப்வே சென்று சுப்மன் கில் தலைமையில் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் அந்த நாட்டு அணிக்கு எதிராக விளையாடுகிறது. இந்தத் தொடர் வருகின்ற ஜூலை 6ஆம் தேதி ஆரம்பிக்கிறது. இதற்கு ஏற்கனவே இந்திய அணி அறிவிக்கப்பட்டு விட்ட நிலையில், தற்பொழுது ஜிம்பாப்வே அணி அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த முறை ஜிம்பாவே அணிக்கு சிக்கந்தர் ராஸா கேப்டனாக தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். புதிய அணியை உருவாக்கும் நோக்கத்தில் ஐந்து முக்கிய வீரர்கள் நீக்கப்பட்டிருக்கிறார்கள். மேலும் பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த இளம் வீரர் ஒருவர் தற்காலிகமாக அணியில் சேர்க்கப்பட்டிருக்கிறார்.

- Advertisement -

அறிவிக்கப்பட்டு இருக்கும் இந்த அணியில கிரேஜ் எர்வின், சீன் வில்லியம்ஸ், ரியான் பர்ல், ஜாய்லட் கும்பி ஆகிய வீரர்கள் பெயர்கள் தேர்வுக்கு பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை. இளம் இந்திய அணி செல்வது போல அங்கிருந்து இளம் ஜிம்பாப்வே அணியவே விளையாட வைக்கிறார்கள்.

இந்த அறிவிக்கப்பட்டிருக்கும் ஜிம்பாப்வே அணியில் பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த பெற்றோர்களுக்கு பெல்ஜியத்தில் பிறந்த நக்வி ஆன்டம் தற்காலிகமாகத் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். இவரது ஜிம்பாப்வே குடியுரிமை உறுதி செய்யப்படும் பட்சத்தில் இவர் இந்திய அணிக்கு எதிரான தொடரில் விளையாடுவார்.

- Advertisement -

இந்த இளம் வீரர் ஜிம்பாப்வே உள்நாட்டு கிரிக்கெட்டில் டி20 வடிவத்தில் 146 என்ற நல்ல ஸ்ட்ரைக் ரேட் வைத்திருக்கிறார். மேலும் முதல் தரப் போட்டியில் 73, லிஸ்ட் ஏ போட்டியில் 72 ரன் ஆவரேஜ் வைத்திருக்கிறார். 8 லிஸ்ட் ஏ போட்டிகளில் 3 சதம் மற்றும் 1 அரைசதம், 10 முதல் தரப் போட்டிகளில் 4 சதங்கள் அடித்திருக்கிறார்.

இதையும் படிங்க :

இந்திய டி20 தொடருக்கான ஜிம்பாப்வே அணி :

சிக்கந்தர் ராஸா (கேப்டன்), அக்ரம் ஃபராஸ், பென்னட் பிரையன், காம்ப்பெல் ஜோனாதன், சதாரா டெண்டாய், ஜாங்வே லூக், கையா இன்னசென்ட், மடாண்டே கிளைவ், மாதேவெரே வெஸ்லி, மருமணி தடிவானாஷே, மசகட்சா வெலிங்டன், மவுடா பிராண்டன், முசரபானி ப்ளெஸ்ஸிங், மையர்ஸ் டியான், நக்வி ஆன்டம், நகர்வா ரிச்சர்ட் மற்றும் ஷும்பா மில்டன்.

- Advertisement -