என் மருமகன் ஷாகினுக்காக நான் இதை செய்யல.. உண்மையில் நடந்தது இதுதான் – ஷாகித் அப்ரிடி விளக்கம்

0
324
Shahid

எப்போதும் இல்லாத அளவுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் மிகவும் தடுமாறி வருகிறது. இந்த நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அணிக்கு கட்டுப்படாத வீரர்கள் மீது நடவடிக்கை எடுப்போம் என்று எச்சரிக்கை செய்திருக்கிறது. இந்த நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் குறித்து பல விஷயங்கள் பற்றி முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடி பேசி இருக்கிறார்.

இந்தியாவில் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் அரையிறுதிக்கு தகுதி பெற முடியாமல் ஆப்கானிஸ்தான் அணியிடம் தோற்று பாகிஸ்தான் அணி வெளியேறியது. இதற்குப் பிறகு பாகிஸ்தான் டெஸ்ட் அணிக்கு ஷான் மசூத் கேப்டனாகவும், வெள்ளைப் பந்து அணிக்கு ஷாகின் அப்ரிடி கேப்டனாகவும் கொண்டுவரப்பட்டார்கள்.

- Advertisement -

இது நீண்ட காலம் நீடிக்க வில்லை உடனே உள்நாட்டில் நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடருக்கு பாபர் அசாம் மீண்டும் கேப்டனாக கொண்டுவரப்பட்டார். நடந்து முடிந்த டி20 உலக கோப்பை தொடரில் அமெரிக்க அணி இடம் தோல்வி அடைந்து முதல் சுற்றுவுடன் பாகிஸ்தான் அணி வெளியேறியது. இப்பொழுது பாகிஸ்தான் வாரியம் வீரர்கள் மீது குற்றம் சுமத்தி நிறைய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இது குறித்து ஷாகித் அப்ரிடி கூறும் பொழுது “நாம் ஒரு பெரிய தொடரில் தோல்வி அடைந்தால் உடனே கிரிக்கெட் வாரியம் வீரர்களின் முன்னே நிற்க வைப்பதை தொடர்ந்து பார்த்து வருகிறேன். கிரிக்கெட் வாரியத்தின் பங்கு ஒரு தந்தையைப் போலானது. கிரிக்கெட் வாரியம் வீரர்களை முன்னே நிற்க வைக்க கூடாது. எந்த விஷயங்கள் நடந்தாலும் தாமாக அதை அமைதியாக கையாள வேண்டும்.

- Advertisement -

மேலும் நான் என்னுடைய மருமகன் என்பதற்காக ஷாகின் அப்ரிடி பற்றி எதையும் புகழ்ந்து பேசியது கிடையாது. கொஞ்சம் நன்றாக கவனித்து பார்த்தால் தெரியும் அவரை நான் பாராட்டி பேசியதை விட அதிகம் திட்டி பேசித்தான் நீங்கள் பார்த்திருக்க முடியும். நான் விளையாட்டுத் திறன் மற்றும் கேப்டன்சி திறன் ஆகியவற்றை பகுப்பாய்வு செய்துதான் எந்த கருத்தையும் கூறுவேன்.

இதையும் படிங்க : கம்பீர் பயிற்சியாளர் கிடையாது.. அவர் இந்த மாதிரியானவர் தான் – ஆர்சிபி கோச் ஆன்டி பிளவர் பேட்டி

எல்லா பாகிஸ்தான் வீரர்களும் இந்த நாட்டின் குழந்தைகள். அவர்கள் நன்றாக விளையாடினார்கள் என்றால் நாம் மகிழ்ச்சியாக இருக்கிறோம். நாம் சாலைகளில் மரியாதை உடன் நடக்கிறோம். ஆனால் நான் எதைச் சொன்னாலும் மக்கள் அதை நெகட்டிவாக எடுத்துக் கொள்வதால்தான் தற்போது நான் எதுவும் சொல்வதில்லை” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -