பாகிஸ்தானில் அடுத்த ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடைபெற இருக்கிறது. இந்தத் தொடரில் பங்கேற்க இந்திய அணி செல்வது இன்னும் முடிவாகவில்லை. தற்பொழுது பிசிசிஐ முரண்டு பிடித்து வருகின்ற காரணத்தால், பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடி விமர்சனம் செய்திருக்கிறார்.
இரண்டு நாடுகளும் தனிப்பட்ட முறையில் கிரிக்கெட் தொடர்களில் விளையாடுவதை நிறுத்திய பிறகும் கூட பாகிஸ்தான அணி இரண்டு மூன்று உலகக் கோப்பைகளில் விளையாட இந்தியாவுக்கு வந்திருக்கிறது. கடந்த ஆண்டும் கூட ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் விளையாட பாகிஸ்தான் வந்தது.
எனவே இதன் காரணமாக இந்திய அணியும் சாம்பியன்ஸ் டிராபியில் விளையாட பாகிஸ்தான் செல்லும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்திய கிரிக்கெட் வாரியம் இதற்கு இன்னும் சம்மதம் தெரிவிக்கவில்லை. மாறாக பொதுவான இடத்தில் இந்திய அணிக்கான போட்டிகளை நடத்துவதற்கு பேச்சுவார்த்தை நடத்துகிறது. மேலும் பாதுகாப்பு பிரச்சனை இருக்கும் என காரணம் கூறுகிறது.
இதுகுறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடி கூறும் பொழுது “நாங்கள் பல கடினமான காலகட்டங்களில் இந்தியாவிற்கு பலமுறை சென்று விளையாடி வந்திருக்கிறோம். எங்களுக்கு இந்தியாவில் அச்சுறுத்தல்கள் இருந்த பொழுதிலும் கூட நாங்கள் தொடர்ந்து சென்று விளையாடினோம். நாங்கள் அவர்களின் நோக்கங்களை அறிந்து கொண்டோம். தொடர்ந்து இந்தியாவை ஆதரித்து வந்தோம்.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமும், பாகிஸ்தான் அரசாங்கமும் அச்சுறுத்தல்கள் இருந்த போதும் கூட இறுதியாக ஒரு முடிவெடுத்து எங்களை அனுப்பியது. ஆனால் இந்தியா பாகிஸ்தான் வந்து விளையாடாமல் இருப்பதற்காக பாதுகாப்பை ஒரு சாக்கு போக்காக கூறி வருகிறது.
இதையும் படிங்க : கம்பீருக்கு கட்டாயம் இந்த விஷயத்துல விராட் கோலி உதவி தேவை.. பொறுத்திருந்து பாருங்க – ஸ்காட் ஸ்டைரிஸ் கருத்து
மாணவர்கள் நன்றாக இருக்க நல்ல ஆசிரியர்கள் தேவை. இதுபோல அடிமட்ட கிரிக்கெட்டில் வீரர்களை உருவாக்குவதற்கு நல்ல ஆசிரியர்கள் தேவைப்படுகிறார்கள். எனவே கேரி கிரிஸ்டின் பாகிஸ்தான் அணிக்குதேவை கிடையாது. மாறாக அவர் பாகிஸ்தான் அண்டர் 15 மற்றும் அண்டர் 19 போன்ற அடிமட்ட அணிகளுக்கு தேவைப்படுகிறார். அங்கு வீரர்களை சிறப்பாக உருவாக்குவதின் மூலம் அவர்கள் பாகிஸ்தான் அணிக்கு சிறப்பானவர்களாக வருவார்கள்” என்று கூறுகிறார்.






