ஷாகின் யூசுப் பாயிடம் அப்படி நடந்திருக்க கூடாது.. சொன்னதை செஞ்சிருக்கணும் – பாகிஸ்தான் முன்னாள் வீரர் விமர்சனம்

0
185
Shaheen

தற்போது பாகிஸ்தான் கிரிக்கெட்டில் நிறைய மாற்றங்களும் சீர்திருத்தங்களும் நடைபெற்றுக் கொண்டு வருகின்றன. மேலும் பாகிஸ்தான் அணி வீரர்கள் யார் ஒழுங்கீனமான செயல்களில் ஈடுபட்டாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் துணை பயிற்சியாளராக இருந்த முன்னாள் லெஜெண்ட் பாகிஸ்தான் வீரர் முகமது யூசுப் இடம் ஷாகின் அப்ரிடி தவறாக நடந்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இது குறித்து பாகிஸ்தான் முன்னாள் வீரர் அதிக்-உஸ்-ஜமான் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

அயர்லாந்து தொடரில் பாகிஸ்தான் வேகப் பந்துவீச்சாளர் ஷாகின் அப்ரிடி வலைப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபொழுது கிரீசை பார்க்காமல் நோபால் வீசி பயிற்சியில் ஈடுபட்டிருக்கிறார். அப்பொழுது முகமது யூசுப் பயிற்சியிலேயே சரியாக செய்தால்தான் ஆட்டத்தில் எல்லாம் சரியாக வரும் என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -

இது ஷாகின் அப்ரிடியை கோபப்படுத்திய காரணத்தினால் சீனியர் லெஜெண்ட் வீரர் என்றும் பார்க்காமல் முகமது யூசுப் இடம் கோபப்பட்டு வார்த்தைகளை விட்டதாக கூறப்படுகிறது. இதுதான் தற்பொழுது அவருக்கு எதிராக திரும்பி இருக்கிறது. அவர் தன் மனைவிக்கு குழந்தை பிறக்கும் காரணத்தினால் பங்களாதேஷ் தொடரில் விளையாட மாட்டார் என்று கூறப்பட்டாலும், ஒழுங்கு நடவடிக்கை காரணமாகவே விலக்கி இருக்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது.

இது குறித்து பாகிஸ்தான் முன்னாள் வீரர் அதிக்-உஸ்-ஜமான் கூறும்பொழுது “யூசுப் பாய் அணியில் ஒரு அங்கம். அவருக்கு வலை பயிற்சியில் பந்துவீச்சு பயிற்சியை கண்காணிக்கும் பொறுப்பு கொடுக்கப்பட்டால், அவர் பந்துவீச்சாளர் நோபால் வீசினால் அதைச் சுட்டிக் காட்டவே செய்வார். நீங்கள் வலையில் தவறாக பயிற்சி செய்தால் அது போட்டியிலும் வரும்.

- Advertisement -

எனவே ஷாகின் அப்ரிடி முகமது யூசுப் பாயிடம் எந்தவித மறுப்பும் சொல்லாமல் கோபத்தை வெளிப்படுத்தாமல் அவர் சொன்னதை கேட்டு செயல்பட்டு இருக்க வேண்டும். ஷாகின் யூசுப் பாயை அவமானப்படுத்தினாரா? என்று தெரியாது எல்லாம் யூகமாகவே வெளியில் சென்று கொண்டிருக்கிறது.

இதையும் படிங்க: கோலிக்கு பயந்து அந்த மாதிரி சொல்றது.. எரிச்சலா இருக்கு.. ஏத்துக்க மாட்டேன் – ஆஸி டிம் பெய்ன் பேச்சு

ஒருவேளை அவர் இப்படி செய்திருந்தால் அது சரியானது கிடையாது. முகமது யூசுப் பாய் பாகிஸ்தான் கிரிக்கெட்டில் ஷாகின் அப்ரிடியை விட மிகப்பெரிய பெயர். எனவே அவர் பயிற்சியாளராக உங்களுக்கு ஒரு விஷயத்தை அறிவுறுத்தினால், நீங்கள் உங்கள் தலையை தொங்க போட்டுக்கொண்டு அதை ஏற்றுக் கொண்டு வேலையை செய்ய வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -