கோலிக்கு பயந்து அந்த மாதிரி சொல்றது.. எரிச்சலா இருக்கு.. ஏத்துக்க மாட்டேன் – ஆஸி டிம் பெய்ன் பேச்சு

0
578
Paine

பொதுவாக கிரிக்கெட் உலகில் விராட் கோலியை களத்தில் வம்பு இழுக்கக் கூடாது என முன்னாள் மற்றும் இந்நாள் வீரர்கள் கூறுவார்கள். யாராவது அவரை சீண்டினால் அது அவர் சிறப்பாக செயல்படுவதற்கு உத்வேகமாக அமைந்து விடுகிறது என்று நம்பப்படுகிறது. தற்பொழுது இது குறித்து ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் டிம் பெய்ன் பேசியிருக்கிறார்.

2014 ஆம் ஆண்டு இந்திய அணி ஆஸ்திரேலியவிற்கு டெஸ்ட் கிரிக்கெட் சுற்றுப்பயணம் செய்த பொழுது விராட் கோலியின் ஆக்ரோசத்திற்காக தொடர் ஆரம்பிப்பதற்கு முன்பே அதிகம் கவனிக்கப்பட்டார். அந்த தொடரில் ஆஸ்திரேலிய வீரர்கள் விராட் கோலி நிறைய முறை வம்புக்கு இழுத்தார்கள்.

- Advertisement -

இந்தத் தொடரில் விராட் கோலி பேட்டிங்கால் 693 ரன்கள் குவித்து பதில் சொன்னதோடு, களத்தில் எந்த நிலையில் ஆஸ்திரேலிய வீரர்கள் மோதினாலும் திருப்பி மோதுவதை நிறுத்தாமல் இருந்தார். ஆஸ்திரேலியா வீரர்கள் விராட் கோலி வம்புக்கு இழுத்ததே அவர் அவ்வளவு ரன்கள் குவிப்பதற்கு காரணமாக அமைந்தது என்று நம்பப்படுகிறது.

இந்த நிலையில் 2018 ஆம் ஆண்டு இந்திய அணி மீண்டும் ஆஸ்திரேலியாவிற்கு டெஸ்ட் சுற்றுப்பயணம் சென்ற பொழுது, அப்போது ஆஸ்திரேலியா வீரர் மைக்கேல் கிளார்க் விராட் கோலி யாரும் வம்புக்கு இழுக்க வேண்டாம் என்று கூறியிருந்தார்.

- Advertisement -

தற்பொழுது இது குறித்து பேசி இருக்கும் டிம் பெய்ன் ” விராட் கோலியை ஸ்லெட்ஜிங் செய்ய வேண்டாம் என்று பொதுவாக சொல்வார்கள். ஆனால் ஒரு விஷயத்தை பொதுவாக புரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் அவரை ஏதாவது செய்தாலும் செய்யாவிட்டாலும் அவர் எப்படியும் ரன்கள் எடுத்துக் கொண்டுதான் இருப்பார். எனவே அவர் கோபப்படும்படி ஏதாவது செய்யாமல், அவரை திசை திருப்புவதற்கு நான் ஏதாவது நிச்சயம் செய்வேன். இதனால் கவனம் சிதறி அவர் தவறாக ஷாட் விளையாடலாம். நாம் ஒருவரிடம் பேசுவதால் மட்டுமே அவர் மிகச் சிறப்பாக மாறிவிட முடியாது” என்று கூறி இருக்கிறார்.

இதையும் படிங்க : வெறும் 20 வயது.. அபிஷேக் ஷர்மாவுக்கு போட்டி.. ஆஸி டி20-ல் களம் இறக்கும் கூப்பர் கானோலி யார்?.. சுவாரசிய தகவல்கள்

மேலும் விராட் கோலி இடம் எதுவும் செய்ய வேண்டாம் என்று கூறுவது தன்னை எரிச்சல் படுத்துவதாக இருப்பதாகவும், அதே சமயத்தில் மைக்கேல் கிளார்க் வம்புக்கு இழுக்க வேண்டாம் என்று கூறியதை தான் ஏற்றுக் கொள்வதாகவும் டிம் பெய்ன் குறிப்பிட்டு கூறியிருக்கிறார்.

- Advertisement -