நாங்க ஒன்னும் தெரு கிரிக்கெட் டீம் கிடையாது.. ரசிகர்களே இவங்கள மாதிரி நடக்காதிங்க – ஷாகின் அப்ரிடி வருத்தம்

0
642
Afridi

கடந்த ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் போது பாகிஸ்தான் அணி மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பின் மீது என்ன மாதிரியான கடுமையான விமர்சனங்கள் உருவானதோ தற்போதும் அது போலவே உருவாகி இருக்கிறது. இந்த நிலையில் பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் ஷாகின் அப்ரிடி உருக்கமான வேண்டுகோள் ஒன்றை வைத்து இருக்கிறார்.

நடக்கும் டி20 உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி யாரும் எதிர்பார்க்காத விதத்தில் அமெரிக்க அணியிடம் தோல்வி அடைந்தது. இதன் காரணமாக அந்த அணியின் இரண்டாவது சுற்று வாய்ப்பு நிச்சயம் இல்லாத நிலையில் இருக்கிறது. அயர்லாந்தை பாகிஸ்தான் வெல்ல வேண்டும், அயர்லாந்து அமெரிக்காவை வெல்ல வேண்டும் என்கின்ற நிலை இருக்கிறது.

- Advertisement -

மேலும் பாகிஸ்தான் அணி இந்த டி20 உலகக்கோப்பை முன்பாக சிறப்பு பயிற்சிகள் எல்லாம் செய்து உடல் தகுதிக்காகத் தயாரானது. மேலும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சிறந்த முன்னாள் வீரர்களைப் பயிற்சியாளராகக் கொண்டு வருவதற்கு பெரிய முயற்சி செய்தது. இந்த நிலையில் இந்திய அணி 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற பொழுது இந்திய அணிக்கு பயிற்சியாளராக இருந்த கேரி கிரிஸ்டனை கொண்டு வந்தது.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சிறந்த முறையில் வேலைகளை செய்தாலும் கூட, வீரர்கள் போட்டியை வெல்லும் தகுதியில் இல்லாமல் இருக்கிறார்கள். டி20 உலகக்கோப்பைக்கு முன்பாக இங்கிலாந்து சென்று படுதோல்வியை டி20 தொடரில் சந்தித்து வந்தார்கள். இதன் காரணமாக பாகிஸ்தான் ரசிகர்களும், பாகிஸ்தான் முன்னால் வீரர்களும் கடுமையான விமர்சனம் செய்து வருகிறார்கள்.

- Advertisement -

தற்போது இது குறித்து ஷாகின் அப்ரிடி பேசும்பொழுது “நல்ல காலம் இருக்கும் பொழுது உங்களை எல்லோருமே ஆதரிக்கிறார்கள். ஆனால் கடினமான காலங்களில் ரசிகர்கள் எப்போதும் எங்களை ஆதரிக்க வேண்டும் என்று நான் கூறுவேன். நாங்கள் உங்களுடைய அணி, தெரு கிரிக்கெட் விளையாடும் அணி கிடையாது. மேலும் இது சிபாரிசுகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட அணியும் கிடையாது. இது உங்கள் அணி நீங்கள்தான் ஆதரிக்க வேண்டும். நீங்கள் மீடியாக்கள் போல நடந்து கொள்ளக் கூடாது.

இதையும் படிங்க : 73 ஸ்ட்ரைக் ரேட் 35 ரன்.. துபேவா சாம்சானா.. வெ.இ-ல் என்ன செய்யலாம்?.. வாசிம் ஜாபர் பேட்டி

நான் என்னுடைய மாமா ஷாஹித் அப்ரிடி உடன் நெருக்கமாக கிரிக்கெட்டில் வேலைகள் செய்திருக்கிறேன். மேலும் மொயின் கான் கிரிக்கெட் அகாடமியில் தொடர்ந்து பேட்டிங் பயிற்சிகள் செய்து வருகிறேன். என்னுடைய பேட்டிங் பயிற்சி கடைசி இரண்டு ஓவரில் பவுண்டரிகள் அடிக்கும் பயிற்சிதான். ஏனென்றால் அணிக்கு அதுதான் தேவைப்படுகிறது” என்று கூறியிருக்கிறார்

- Advertisement -