கிரிக்கெட் செய்திகள் | Daily Cricket News in Tamil

“ஷாகின் அப்ரிடி இல்ல.. நான் விளையாடியதுல இவர்தான் ரொம்ப கஷ்டமான பவுலர்!” – ரோகித் சர்மா ஓபன் டாக்!

இந்தியாவில் 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில், இந்திய அணியில் சிறு விளிம்பில் நின்று கொண்டிருந்த ரோகித் சர்மா புறக்கணிக்கப்பட்டார்!

- Advertisement -

இன்று 2023 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெறும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் இடம் பெற்று இருப்பதோடு, அவர் இந்திய அணியை வழிநடத்தும் கேப்டனாகவும் உயர்ந்திருக்கிறார்.

இந்திய அணிக்கு அவர் உள்ளே வருவதற்கு முன்பான ஆரம்ப காலங்கள் அவர் குறித்த அதிக நம்பிக்கையை வெளியுலகத்திற்கு காட்டியது. அந்த அளவிற்கு வளர்ந்து வரும் இளம் வீரராக அவர் உள்நாட்டில் விளங்கினார்.

அதே சமயத்தில் இந்திய அணிக்கு தேர்வான பிறகு அவரால் எதிர்பார்த்த அளவுக்கு மிகச் சிறப்பாக செயல்பட முடியவில்லை. அவருக்கென்று அணியில் நிரந்தரமான ஒரு இடமில்லை. மேலும் அணிக்கு வெளியே உள்ளே என்றுதான் போய் வந்து கொண்டு இருந்தார். இதன் காரணமாக 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை இந்திய அணியில் கடைசி நேரத்தில் அவர் வெளியேற்றப்பட்டார்.

- Advertisement -

இதற்கு அடுத்து 2013-ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரில் மகேந்திர சிங் தோனி தினேஷ் கார்த்திக்கை நகர்த்தி ரோகித் சர்மாவை துவக்க வீரராக கொண்டு வந்தார். இது அப்போது யாரும் எதிர்பார்க்காத ஒரு முடிவு. ஆனால் இன்றுவரை அது உலக கிரிக்கெட்டில் மிகப்பெரிய தாக்கத்தை உண்டாக்கி இருக்கக்கூடிய முடிவாக இருக்கிறது.

இதற்குப் பிறகு ரோகித் சர்மா உலக கிரிக்கெட்டில் நிறைய சாதனைகளை குறிப்பாக வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் நிறைய சாதனைகளை படைத்திருக்கிறார். சமீபத்தில் ஒரு நாள் கிரிக்கெட்டில் 10 ஆயிரம் ரன்களை தாண்டிய வீரராக தம்மை பதிவு செய்திருக்கிறார்.

கிரிக்கெட்டில் ஒவ்வொரு விஷயத்திலும் யார் சிறந்தவர்கள் என்பது குறித்தான கேள்வி ரோகித் சர்மாவிடம் முன்வைக்கப்பட்டது. அதற்கு ரோகித் சர்மா சுவாரசியமான பதில்களை தந்திருக்கிறார். அது குறித்து பார்ப்போம்!

பெஸ்ட் கவர் டிரைவ் டெக்னிக் – விராட் கோலி
பெஸ்ட் ரைட் டிரைவ் – சச்சின் டெண்டுல்கர்
பெஸ்ட் ஸ்கூப் ஷாட் – சூரியகுமார் யாதவ்
சந்தித்ததில் கடினமான பவுலர் – டேல் ஸ்டெய்ன்
திறமையான வீரர் – சுப்மன் கில்
கூலான வீரர் – சூரியகுமார் யாதவ்

- Advertisement -
Published by

Recent Posts