ஐ.பி.எலில் எனக்கு மிகவும் பிடித்த அணி இதுதான் – மகளிர் கிரிக்கெட்டின் சேவாக் ஷெபாலி வர்மா விருப்பம்

0
769
Shafali Verma names her favourite IPL Team

ஆண்கள் கிரிக்கெட்டிற்கு இருக்கும் முக்கியத்துவத்தில் பாதியளவு கூட இன்றும் பெண்கள் உருவாகவில்லை என்பது வருந்த கூடிய ஒன்றே. நடந்துகொண்டிருக்கும் மகளிர் உலககோப்பைக்கான பார்வையாளர்கள், நடக்க போகும் ஐபிஎல் தொடரின் பார்வையாளர்களில் 10% இருந்தாலே பெரிய விசயம்.

ஆண்கள் கிரிக்கெட்டில் இருக்கும் வேகம், வலிமை, பவுண்டரி, சிக்ஸர்கள், பெரிய ஸ்கோர்கள் போன்றவை இல்லாதது பார்ப்பவர்களுக்குச் சுவாரசிய குறையை உண்டாக்குவதாக எண்ணுகிறார்கள். கிரிக்கெட்டை ஸ்கோர்-போர்டு வழியாகப் பார்ப்பவர்களுக்கு, நுணுக்கங்கள், சிறப்பான யுக்திகள் மூலம் விளையாடுவது பிடிக்காது என்பதை விட தெரியாது என்றுதான் அர்த்தம்.

- Advertisement -

இந்தியாவில் கிரிக்கெட்தான் மிகப்பெரிய விளையாட்டு. ஆனால் கிரிக்கெட்டிற்கு இரசிர்களென்பது குறைவுதான். இந்தியாவில் கிரிக்கெட் இரசிகர்கள் என்று இருப்பதில் பெரும்பாலானவர்கள் அணிகளின், வீரர்களின், அவர்களால் ஸ்கோர் போர்டில் மாறும் எண்களுக்குத்தான் இரசிகர்கள்.

இந்தியாவில் பெண்கள் கிரிக்கெட் முன்புக்கு வளர்ந்திருக்கிறதுதான். ஆனால் ஒட்டுமொத்த கிரிக்கெட் வளர்ச்சியோடு ஒப்பிடும்போது, ஏற்பட்டுள்ள வளர்ச்சி மிகக் குறைவுதான். பெரும்பாலான இந்தியப் பெற்றோர்கள் தங்கள் பெண் பிள்ளைகள் கிரிக்கெட்டோடு வளர்வதை விரும்புவதில்லை. அதற்காகப் பணத்தையும், நேரத்தையும் செலவழிக்கத் தயாராகவும் இல்லை. தயாராக இருப்பவர்களுக்கும் கிரிக்கெட் பயில்வதற்கான உள்கட்டமைப்பு வசதிகள் அருகிலில்லை. மேலும் படிப்போடு விளையாட்டையும் வளர்த்தெடுக்க வேண்டிய பள்ளிக்கூடங்களில். இன்று சரியாக மைதானங்களே இல்லை.

இப்படியான சூழலில்தான், இந்திய கிரிக்கெட் அணி சீரூடையில், ஆட்டத்தின் முதல் பந்தையே பவுண்டரிக்கு வெளியே தூக்கியடிக்கும் ஒரு பெண்ணைப் பார்க்கிறேன். அவரை பெண் என்பதா இல்லை சிறுமி என்பதாவிலே பெருங்குழப்பம். ஆனால் அவர் அடுத்த பந்தையும் அசராமல் பவுண்டரிக்குத் துரத்துகிறார். பின் வர்ணனையாளர்கள் பேசுவதைக் கொஞ்சம் கூர்ந்து கேட்கும் போதுதான் சில விசயங்கள் புரிந்ததோடு ஆச்சரியமாகவும் இருந்தது.

- Advertisement -

அவர் பெயர் ஷெபாலி வர்மா. அவர் மாநிலம் ஹரியானா. அவர் வயது வெறும் 15 என்று!

ஐபிஎல் மூலம் பெரும்பணம் சம்பாதித்து வரும் பிசிசிஐ அதிலிருந்து சிறிய அளவிலான பணத்தை உள்நாட்டு ஆண்கள், பெண்கள் கிரிக்கெட்டிற்கும் செலவிட முன்வந்துள்ளது. முன்பு இந்த ஆண்டிற்கான ரஞ்சி டிராபி பற்றிய எந்த அறிவிப்பையும் வெளியிடாமல் இருந்ததிற்கு எழுந்த எதிர்ப்பும் ஒரு காரணமாக இருக்கலாம்.

இதன்படி அடுத்த ஆண்டு ஐந்து அல்லது ஆறு அணிகளை வைத்து மகளிர் ஐபிஎல் நடத்தும் திட்டம் பிசிசிஐ-க்கு இருப்பதாக தெரியவந்துள்ளது. இதுக்குறித்து ஷெபாலி வர்மா “இது மிகவும் நல்ல சிந்தனை. அனைத்து பெண் கிரிக்கெட்டர்களும், உள்நாட்டு பெண் கிரிக்கெட்டர்களும், நிறைய கற்றுக்கொள்ள இது உதவியாய் இருக்கும்” என்று தெரிவித்திருந்த அவர், ஐபிஎல்-ல் தனக்கு மிகவும் பிடித்த அணி மும்பை இன்டியன்ஸ் என்றும், அவர்கள் விளையாடுவதை விரும்பி பார்ப்பேன் என்றும் கூறியிருக்கிறார்!