எனது கிரிக்கெட் வாழ்கையில் நான் பந்துவீச திணறிய 2 பேட்ஸ்மேன்கள் இவர்கள் தான் – பாகிஸ்தான் வீரர் ஷதாப் கான்

0
798
Shadab Khan

பாகிஸ்தான் அணியின் சிறந்த ஆல்ரவுண்டர் வீரராக வலம் வந்து கொண்டிருப்பவர் ஷதாப் கான். 2017 ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணியில் விளையாட தொடங்கி இதுவரை 6 டெஸ்ட் போட்டிகள்,42 ஒருநாள் போட்டிகள் மற்றும் 64 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். டெஸ்ட் போட்டிகளில் 14 விக்கெட்டுகளையும், ஒருநாள் போட்டிகளில் 32 விக்கெட்டுகளையும், டி20 போட்டியில் 73 விக்கெட்டுகளை இதுவரை கைப்பற்றியுள்ளார். அதேபோல இவர் இதுவரை 6 முறை அரைசதங்கள் குவித்து இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் அணிக்காக சிறப்பாக விளையாடுவது போன்று, பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் 52 போட்டிகளில் விளையாடி 46 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இந்தத் தொடரில் இவரது எக்கானமி விகிதம் 7.40 ஆகும். இந்தத் தொடரில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய பந்துவீச்சாளர்கள் பட்டியலில், இவர் எட்டாவது இடத்தில் இருப்பதும் கவனிக்கப்பட வேண்டியது. அடுத்த ஆண்டு பிஎஸ்எல் தொடரில் இவர் இஸ்லாமாபாத் அணிக்காக விளையாட இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்த இரண்டு பேட்ஸ்மேன்களுக்கு பந்து வீசுவது மிகக் கடினம்

சமூகவலைதளத்தில் இவரிடம் ஒரு ரசிகர் கேள்வி எழுப்பியிருக்கிறார். அந்தக் கேள்வி என்னவெனில், நீங்கள் எந்த பேட்ஸ்மேன்களுக்கு எதிராக பந்து வீச சிரமப்பட்டு இருக்கிறீர்கள் என்பதே. அந்தக் கேள்விக்கு அவர், “ரோஹித் ஷர்மா மற்றும் டேவிட் வார்னருக்கு எதிராக பந்துவீசம் பொழுது சிரமப்பட்டு இருக்கிறேன். அவர்களுக்கு எதிராக பந்து வீசுவது மிகவும் சவாலான ஒரு விஷயம்”. இவ்வாறு தன்னுடைய பதிலை அவர் அந்த ரசிகருக்கு கூறியுள்ளார்.

ரோஹித் ஷர்மா கடந்த சில ஆண்டுகளாகவே ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் மிக சிறப்பாக விளையாடிக் கொண்டிருக்கிறார். தற்பொழுது இந்திய அணிக்கு இந்த இரண்டு பார்மெட்டின் கேப்டனாகவும் பொறுப்பேற்று இருக்கிறார். கேப்டனாக பொறுப்பேற்ற நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற டி20 தொடரை (3-0 என்கிற கனக்கில்) இவர் வென்றிருக்கிறார்.

டெஸ்ட் போட்டிகளிலும் மிக சிறப்பாக விளையாடி வருகிறார். டெஸ்ட் தரவரிசை புள்ளி பட்டியலில் இந்திய பேட்ஸ்மேன்கள் மத்தியில் இவர் முதலிடத்தில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது. தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக நடைபெறவிருக்கும் டெஸ்ட் தொடரில் காயம் காரணமாக இவர் வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

மறுபக்கம் டேவிட் வார்னர் சமீபத்தில் நடந்து முடிந்த உலகக் கோப்பை டி20 தொடரில் ஆஸ்திரேலிய அணிக்காக சக்கைப்போடு போட்டார். ஆஸ்திரேலிய அணி கோப்பையை கைப்பற்ற மிகப்பெரிய அளவில் அவர் கை கொடுத்தார். அந்த தொடரின் தொடர் நாயகன் விருதை இவர் பெற்றதும் குறிப்பிடத்தக்கது. தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்றுவரும் ஆஷஸ் டெஸ்ட் தொடரில் மூன்று இன்னிங்ஸ்களில் 2 அரை சதங்கள் குவித்து அசத்தி வருகிறார்.