கோலியை வைத்து பாகிஸ்தான் பவுலர்ஸ் பற்றி அகர்கர் பேசியதற்கு ஷதாப் கான் பதிலடி!

0
3280
Shadab

ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்த முறை ஒருநாள் கிரிக்கெட் வடிவத்தில் நடக்கிறது. கடந்த முறை டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை இருந்த காரணத்தினால் டி20 வடிவத்தில் நடத்தப்பட்டது. தற்பொழுது ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்காக ஒருநாள் கிரிக்கெட் வடிவத்திற்கு வந்திருக்கிறது!

இந்த ஆசியக் கோப்பை தொடர் முதன்முதலாக பாகிஸ்தான் மற்றும் இலங்கை என இரு நாடுகளில் வைத்து நடத்தப்படுகிறது. இந்தியா பாகிஸ்தான் சென்று விளையாட மறுத்துவிட்ட காரணத்தினால் இப்படி ஒரு மாற்று யோசனை செய்யப்பட்டு செயல்படுத்தப்பட்டு இருக்கிறது.

- Advertisement -

பாகிஸ்தான் அணி ஆசியக்கோப்பை தொடரின் முதல் போட்டியில் உள்நாட்டில் நேபாள் அணிக்கு எதிராக 30 ஆம் தேதி விளையாடுகிறது. இதற்கு அடுத்து செப்டம்பர் 2ஆம் தேதி முதல் சுற்றின் தனது கடைசி மற்றும் இரண்டாவது போட்டியை இந்திய அணிக்கு எதிராக விளையாடுகிறது.

இந்திய அணி இந்த ஆசிய கோப்பை தொடரின் முதல் போட்டியை பாகிஸ்தான் அணிக்கு எதிராக இலங்கை கண்டி மைதானத்தில் செப்டம்பர் 2ஆம் தேதி விளையாடுகிறது.முதல் சுற்றில் இரண்டாவது மற்றும் கடைசிப் போட்டியில் நேபாள் அணியுடன் செப்டம்பர் 4 ஆம் தேதி விளையாடுகிறது.

தற்போது இந்திய அணி ஆசிய கோப்பை தொடருக்கான பயிற்சிக்காக கர்நாடக மாநிலம் ஆலூரில் ஆறு நாட்கள் பயிற்சி முகாமில் கலந்து கொண்டு பயிற்சி பெற்று வருகிறது. பாகிஸ்தானுக்கு எதிராக எப்படி விளையாடுவது என்கின்ற வியூகம் வகுக்கப்பட்டு வருகிறது. அதற்கு தக்கபடி பயிற்சியும் செய்யப்பட்டு வருகிறது.

- Advertisement -

பாகிஸ்தான் அணி தற்போது இலங்கையில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை மொத்தமாக கைப்பற்றி இருக்கிறது. இதன் மூலம் ஒரு நாள் கிரிக்கெட் தரவரிசையில் முதல் இடத்தையும் பிடித்திருக்கிறது.

இந்த நிலையில் பாகிஸ்தான் வேகப் பந்துவீச்சாளர்களை விராட் கோலி பார்த்துக் கொள்வார் என்று மிக அலட்சியமாக பத்திரிக்கையாளர் சந்திப்பில் இந்திய அணியின் தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கர் கூறியது பற்றி, பாகிஸ்தான் அணியின் துணை கேப்டன் ஷதாப் கான் இடம் கேட்கப்பட்டது.

இதுகுறித்து பதில் அளித்த ஷதாப் கான்
“இது குறிப்பிட்ட நாளில் செயல்படுவதை பொருத்தது. இப்பொழுது நானும் அல்லது இந்தியா தரப்பைச் சேர்ந்த யாரோ என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். ஆனால் அவையெல்லாம் வெறும் வார்த்தைகள். இப்படியான வார்த்தைகளை யார் வேண்டுமானாலும் சொல்லலாம். அது எதையும் மாற்றவோ பாதிக்கவோ செய்யாது. போட்டி நடக்கும் அதற்குப் பிறகு என்ன நடக்கிறது என்று பார்த்துக் கொள்ளலாம்!” என்று கூறியிருக்கிறார்!