பங்ளாதேஷ் ஓடிஐ தொடரில் முக்கிய வீரர் விலகல்; ஆர்சிபி வீரர் சேர்ப்பு! !

0
1413

பங்களாதேஷ் அணியுடன் விளையாடும் ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியிலிருந்து ஜடேஜா விலகியுள்ளார். மாற்று வீரர் அறிவிக்கப்பட்டுள்ளது.

டி20 உலக கோப்பை முடித்துவிட்டு இந்தியஅணி நியூசிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கிறது. முதல் கட்டமாக டி20 தொடர் முடிந்திருக்கிறது. இதை இந்திய அணி கைப்பற்றியுள்ளது. அடுத்ததாக ஒரு நாள் தொடர் நடக்கவிருக்கிறது. இத்தொடர் முடிந்த பிறகு இந்திய அணி வங்கதேசம் செல்கிறது.

அங்கு சென்று மூன்று ஒரு நாள் போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இத்தொடரில் ரவீந்திர ஜடேஜா இடம் பெற்றுள்ளார்.

டி20 உலக கோப்பைக்கு முன்பு காயம் காரணமாக உலககோப்பையில் விளையாட முடியாமல்போன ஜடேஜா, தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். அடுத்து வரும் பங்களாதேஷ் ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரில் இவரின் பெயர் இடம்பெற்றுள்ளது.

ஆனால் ஜடேஜா குணமடைவதில் சற்று சிக்கலாகி உள்ளது. முழுமையாக குணமடைய இன்னும் சில காலம் எடுக்கும் என்று மருத்துவ குழுவினரால் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. ஆகையால் இவரால் வங்கதேச தொடரில் இடம்பெற முடியாது என தெரியவந்துள்ளது.

இவருக்கு மாற்று வீரராக தற்போது ஆர்சிபி அணியை சேர்ந்த சபாஸ் அஹ்மது சேர்க்கப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே தென்னாபிரிக்கா அணியுடன் நடந்த ஒருநாள் தொடரில் சிறப்பாக செயல்பட்டதால், மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

டெஸ்ட் போட்டியில் யார் ஜடேஜாவிற்கு மாற்று என்பதை இன்னும் பிசிசிஐ அறிவிக்கவில்லை. ஆல்ரவுண்டர்கள் இல்லாமல், பேட்ஸ்மேன் சேர்க்கப்படலாம் என்கிற பேச்சுக்கள் அடிப்படுகின்றன. அந்த வகையில் சூர்யகுமார் யாதவ் பெயரும் அடிப்படுகின்றன.