“உங்களால முடிஞ்சா முதல்ல இந்திய அணியை பாகிஸ்தான் அனுப்புங்க!” – ரிஸ்வான் விவகாரத்துக்கு சாகித் அப்ரிடி பதில்!

0
16772
Afridi

இந்தியா பாகிஸ்தான் அணிகள் நடப்பு உலக கோப்பை தொடரில் சில நாட்களுக்கு முன்பு உலகின் மிகப்பெரிய மைதானமான குஜராத் அகமதாபாத் மைதானத்தில் மோதிக்கொண்டன.

உலகக் கோப்பை தொடருக்கு முதல் அட்டவணை அறிவித்த பொழுது பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகம் குஜராத்தில் விளையாடுவதற்கு கடுமையான ஆட்சேபனை தெரிவித்து வந்தது.

- Advertisement -

இத்தோடு சேர்த்து ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக சென்னையிலும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக பெங்களூர்லும் விளையாட முடியாது என்று கூறியது.

ஆப்கானிஸ்தான அணி நல்ல சுழற் பந்துவீச்சு தாக்குதல் வைத்திருப்பதால் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான சென்னையிலும், பெரிய அணியான ஆஸ்திரேலியாவுக்கு எதிராக, பேட்டிங் செய்ய சாதகமான சிறிய மைதானத்தைக் கொண்ட பெங்களூரிலும், தங்களுக்கு திட்டமிட்டு அட்டவணை போடப்பட்டு இருப்பதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் குற்றம் சாட்டியது.

இந்த பிரச்சனை உள்ளுக்குள் சென்று கொண்டிருந்த காரணத்தினால்தான் நடப்பு உலகக் கோப்பை தொடருக்கான அட்டவணை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டு வந்தது. இறுதியாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் கோரிக்கையை ஐசிஐசி மற்றும் பிசிசிஐ ஏற்க வில்லை.

- Advertisement -

இந்த நிலையில் திட்டமிட்டபடி குஜராத் அகமதாபாத் மைதானத்தில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி நடைபெற்ற முடிந்தது. அந்த போட்டியின் போது சில விரும்பத்தகாத நிகழ்வுகள் நடந்தது.

பாகிஸ்தான் அணியின் முகமது ரிஸ்வான் ஆட்டம் இழந்து பெவிலியன் செல்லும் பொழுது, அந்த வழியில் இருந்த இந்திய ரசிகர்கள் சிலர் மதகோஷங்களை அவரைப் பார்த்து எழுப்பினர். இது சமூக வலைதளத்தில் மிகப்பெரிய சர்ச்சையாக மாறியது. இதுகுறித்து இந்தியாவில் ஆதரவு எதிர்ப்பு என்று பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் இது குறித்து பேசி உள்ள பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடி கூறும் பொழுது
“விளையாடுவதற்கு யார் மறுப்பது? இந்தியாதான் மறுத்துக் கொண்டிருக்கிறது. நீங்கள் வேண்டுமானால் இந்திய அணியை பாகிஸ்தான் அனுப்புங்கள். நாங்கள் அவர்களை சிறந்த முறையில் கவனித்துக் கொள்கிறோம்!” என்று கூறியிருக்கிறார்!