இந்திய முன்னாள் வீரர் வீரேந்தர் சேவாக் மகன் ஆரியவீர் சேவாக் தன்னுடைய ரோல் மாடல் கிரிக்கெட் யார் என்பது குறித்து பேசி இருக்கிறார்.
தற்போது 17 வயதாகும் ஆரியவீர் சேவாக் டெல்லி பிரிமியர் டி20 லீக் தொடரில் சென்ட்ரல் டெல்லி அணிக்காக 8 லட்சம் ரூபாய்க்கு வாங்கப்பட்டு ஆச்சரியப்படுத்தி இருக்கிறார். இதுவரையில் அவருடைய அணி ஐந்து போட்டிகளில் விளையாடி இருக்கிறது ஆனால் இவருக்கு இன்னும் வாய்ப்பு கொடுக்கப்படவில்லை.
கவனிக்க வைத்த இன்னிங்ஸ்
சமீபத்தில் கூச் பெகார் டிராபியில் 297 ரன்கள் எடுத்து எல்லோரது கவனத்தையும் கவர்ந்தார். இவரும் தனது தந்தையைப் போலவே வலது கை துவக்க ஆட்டக்காரராக இருந்து வருகிறார். மேலும் தந்தையைப் போலவே அதிரடியாகவும் விளையாடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த இன்னிங்ஸ் காரணமாக இந்திய இளம் கிரிக்கெட் வீரர்களில் கவனிக்கப்படும் வீரராக மாறி இருக்கிறார். தற்போது இவருடைய பெரிய குறிக்கோளாக ஐபிஎல் தொடரில் விளையாடுவது இருக்கிறது. இந்த நிலையில் தன்னுடைய ஐடியல் வீரர் யார் என்பது குறித்து பேசி இருக்கிறார்.
இவர்தான் அந்த வீரர்
இவருடைய தந்தையே பலருக்கும் ரோல் மாடலாக இருக்கும் நிலையில் இவர் அவரை தேர்ந்தெடுக்கவில்லை. மேலும் தோனி, ரோகித், கில், ஜெய்ஸ்வால் என முன்னாள் மற்றும் இந்நாள் வீரர்கள் யாரையும் தேர்வு செய்யவில்லை.
இதையும் படிங்க : அடுத்த சிறந்த 4 பேட்ஸ்மேன்கள் இந்த பசங்கதான்.. இதுல ஆஸி பாக் தெ.ஆ க்கு இடமில்ல – மொயின் அலி கணிப்பு
இதுகுறித்து ஆரியவீர் சேவாக் பேசும் பொழுது ” தற்போது சச்சின் அவர்கள் ஓய்வு பெற்ற வீரராக இருக்கிறார். எனவே நான் விளையாடும் வீரர்களில் விராட் கோலியை என்னுடைய ஐடியல் ரோல் மாடல் வீரராக தேர்ந்தெடுப்பேன். ஏனென்றால் என்னுடைய சகாப்தத்தில் அவர் தலைசிறந்த வீரர். ஐபிஎல் தொடரில் விளையாட வாய்ப்பு கிடைத்தால் நான் அவருடன் ட்ரெஸ்ஸிங் ரூமை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். என்னுடைய பெரிய கனவு” என்று கூறி இருக்கிறார்






