“அனைவரையும் ஏமாற்றி விட்டார்” …. “உடனடியாக அவரை அணியிலிருந்து நீக்க வேண்டும்” – குஜராத் வீரரை கடுமையாக தாக்கி பேசிய வீரேந்தர் சேவாக்!

0
40770

2023 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் இரண்டாவது தகுதி சுற்று இன்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் வைத்து நடைபெற இருக்கிறது . இந்தப் போட்டியில் குஜராத் மற்றும் மும்பை அணிகள் மோத இருக்கின்றன .

சென்னையில் நடைபெற்ற முதலாவது தகுதிக்கு பிறகு போட்டியில் குஜராத் அணி சிஎஸ்கே அணி இடம் 15 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது . இரண்டாவதாக நடைபெற்ற எலிமினேட்டர் போட்டியில் மும்பை அணி லக்னோ அணியை 81 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இரண்டாவது தகுதி சுற்றுக்கு முன்னேறியது .

- Advertisement -

இன்று இரவு ஏழு முப்பது மணிக்கு நடைபெறும் போட்டியில் குஜராத் மற்றும் மும்பை அணிகள் பலப்பரீட்சை நடத்த இருக்கின்றன . லீக் சுற்று ஆட்டங்களில் பலமான அணியாக பலம் வந்த குஜராத் பத்துப் போட்டிகளில் வெற்றி பெற்று 20 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருந்தது குஜராத் . சிஎஸ்கே அணியின் அபார பந்துவீச்சால் 172 ரன்கள் என்ற இலக்கை எட்ட முடியாமல் 157 ரன்களுக்கு அந்த அணி ஆல் அவுட் ஆனது

குஜராத் அணியை பொருத்தவரை அந்த அணியின் பந்து வீச்சு மிகப்பெரிய பலமாக இருந்து வருகிறது . சுழற்பந்து வீச்சில் ரஷித் கான் மற்றும் அஹமத் ஆகியோர் அந்த அணிக்கு மிகப்பெரிய பலமாக இருந்து வருகின்றனர் வேகப்பந்து வீச்சில் முகமது சமி கலக்கி வருகிறார் . ஆனால் அந்த அணியின் பேட்டிங் வரிசையில் தான் வீரர்களிடம் ஒருங்கிணைந்த பங்களிப்பு இல்லாமல் இருந்து வருகிறது .

அந்த அணியின் துவக்க வீரர் சுப்மன் கில் மட்டும் எல்லா போட்டிகளிலும் சிறப்பான பங்களிப்பை அளித்து வருகிறார் . மற்ற வீரர்கள் ஒரு சில போட்டிகளில் பங்களிப்பை வழங்குகின்றனர் . மேலும் ஹர்திக் பாண்டியா தொடர்ச்சியாக சிறப்பான பங்களிப்பை அளிப்பதற்கு தவறி வருகிறார் . குஜராத் அணியை பொருத்தவரை கில் மற்றும் விஜய் சங்கர் இருவரும் தான் பேட்டிங்கில் முக்கிய பங்காற்றி வருகின்றனர் . இது சென்னை அணியுடன் போட்டியின் போது கூட கண்கூடாக தெரிந்தது .

- Advertisement -

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் துவக்க வீரர் விரேந்தர் சேவாக் குஜராத் அணியின் ஆல் ரவுண்டர் மற்றும் இலங்கை அணியின் கேப்டன் தர்ஷன் சணக்காவை கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார். இதுவரை குஜராத் அணிக்காக மூன்று போட்டிகளில் ஆடி இருக்கும் அவர் பெரிய தாக்கம் எதையும் ஏற்படுத்தவில்லை . இது குறித்து கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார் விரேந்தர் சேவாக் .

இது பற்றி கிரிக்பஸ் இணையதளத்தில் பேசியிருக்கும் அவர் ” சணக்காவின் மீது மிகப்பெரிய நம்பிக்கை வைத்திருந்தோம் அவரின் மீதான எதிர்பார்ப்பும் அதிகமாக இருந்தது . அந்த எதிர்பார்ப்பில் ஒரு சதவீதத்தை கூட அவர் பூர்த்தி செய்யவில்லை என்று தெரிவித்துள்ளார் . இந்தப் போட்டியில் அவரை நீக்கிவிட்டு மேற்கிந்திய தீவு வீரரான ஓடியன் ஸ்மித் அணியில் இடம்பெற வேண்டும் எனவும் சேவாக் தெரிவித்திருக்கிறார் .

- Advertisement -

இந்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கு முன்பாக தர்ஷன் சனக்கா மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது . இந்திய மற்றும் இலங்கை அணிகளுக்கு எதிரான டி20 தொடரின் போது மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தன் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்தார் . இந்தத் தொடரில் மாற்று வீரராக குஜராத் அணி அவரை தேர்வு செய்தது . சிறப்பாக செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இதுவரை மூன்று போட்டிகளில் ஆடி இருக்கும் அவர் 26 ரன்கள் மட்டுமே எடுத்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது .