அடுத்த மாதம் துவங்க இருக்கும் ஆசிய கோப்பை டி20 தொடரை டி20 உலக கோப்பை தொடருக்கு தயாராகுவதற்கு இந்திய அணி நிர்வாகம் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென வீரேந்திர சேவாக் கூறியிருக்கிறார்.
அடுத்த மாதம் யுனைடெட் அரபு எமிரேட்டில் எட்டு ஆசியக் அணிகள் பங்கு பெறும் ஆசியக் கோப்பை தொடர் டி20 வடிவத்தில் நடைபெற இருக்கிறது. இந்திய அணி பாகிஸ்தான், இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு எதிராக விளையாடுவதற்கு அதிகபட்ச வாய்ப்புகள் இருக்கிறது.
மாற்றத்தால் வந்த பிரச்சனை
கம்பீர் இந்திய டி20 அணியை அடுத்த ஆண்டு நடக்க இருக்கும் டி20 உலக கோப்பை தொடருக்கு மிகச்சிறப்பாக தயார்படுத்தி வைத்திருந்தார். தற்போது இந்த அணியில் தில்லை உள்ளே கொண்டு வந்திருப்பதால், மீண்டும் பேட்டிங் வரிசையில் மாற்றங்கள் செய்து அணியை சிறப்பாக தயார்படுத்த வேண்டிய தேவை உருவாகி இருக்கிறது.
எனவே ஆசியக் கோப்பை தொடரை இந்திய அணி பரிசோதனை முயற்சிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டு இருக்கிறது. டிராவிட் பயிற்சியாளராக தனது முதல் ஆசியக் கோப்பை தொடரில் தோல்வி அடைந்திருந்தார். அடுத்து நடைபெற இருந்த டி20 உலகக் கோப்பை தொடருக்கு பரிசோதனைகள் செய்தார். தற்போது கம்பீருக்கும் அதே நிலை ஏற்பட்டு இருக்கிறது.
இதைச் செய்ய வேண்டும்
இதுகுறித்து வீரேந்தர் சேவாக் பேசும் பொழுது “தற்போது ஆசியக் கோப்பை தொடர் டி20 வடிவத்தில் நடைபெறுகின்ற காரணத்தினால் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் டி20 உலகக் கோப்பைக்கு இந்திய அணி தயாராவதற்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாக இருக்கும். எந்த புதிய வீரருக்கு வாய்ப்புகள் கொடுக்கலாம்? யாரை அணியில் சேர்க்கலாம்? எப்படியான காம்பினேஷனை உருவாக்கலாம்? என்று கண்டறிய இது சிறந்த வாய்ப்பாகும். இங்கிருந்து உலகக் கோப்பைக்கான இந்திய அணியை உருவாக்கலாம்”
இதையும் படிங்க : ஸ்ரேயாஸ் ஜெய்ஸ்வாலுக்கு வாய்ப்பு தர முடியாது.. அதை கேட்க நீங்க யாரு.. உரிமை இல்ல – கவாஸ்கர் விமர்சனம்
“மேலும் தற்போது இந்திய அணி இருக்கும் நிலையில், தன்னுடைய பலம் என்னவென்று தன்னை சரிபார்த்துக் கொள்வதற்கு ஆசியக் கோப்பை தொடரை விட பெரிய வாய்ப்பு வேறு எதுவும் கிடையாது” என்று கூறியிருக்கிறார்.






