நேற்று ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் தங்கள் சொந்த மைதானத்தில் 103 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் படுதோல்வி அடைந்தது. இந்த தோல்வி குறித்து அந்த அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பேசியிருக்கிறார்.
தற்போது மும்பை இந்தியன்ஸ் அணி 7 போட்டிகளில் விளையாடி இரண்டு போட்டிகளில் மட்டுமே வென்றிருக்கிறது. எனவே குறைந்தபட்சம் அடுத்த ஏழு போட்டிகளில் ஆறு போட்டிகளை தொடர்ந்து வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. எனவே இந்த முறை அந்த அணிக்கு பிளே ஆப் சுற்று வாய்ப்பு மிகவும் குறைவு.
அதே மைதானம்தான்
இந்த போட்டி குறித்து பேசிய ஹர்திக் பாண்டியா கூறும்போது “பவர் பிளேவில் எடுத்ததும் நாம் ஒரு விக்கெட் இழக்கும் பொழுது அது மிகவும் கடினமான ஒரு சூழ்நிலையாக மாறிவிடுகிறது. அங்கிருந்து போட்டியை தொடர்ந்து விரட்ட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு விடுகிறது. பிறகு நாங்கள் அதற்கு ஏற்ற வகையில் சமாளிக்க முடியவில்லை”
“ஆடுகளம் நாங்கள் பேட்டிங் செய்யும்போது ஏதாவது மாற்றம் அடைந்ததா என்பது குறித்து நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை. ஏனென்றால் சிஎஸ்கே விளையாடிய அதே மண் மற்றும் மைதானத்தில் தான் நாங்களும் விளையாடினோம். அவர்கள் சிறப்பாக விளையாடினார்கள். நாங்கள் சரியாக விளையாடவில்லை”
இது அதிகமான ஸ்கோர்
“நம்முடைய ஸ்பின்னர்களும் சிறப்பாகவே பந்து வீசினார்கள். ஆனால் அவர்கள் பக்கத்தில் சஞ்சு ஒரு அசாதாரணமான இன்னிங்ஸ் விளையாடினார். அதே நேரத்தில் அவர்களுடைய மற்ற பேட்ஸ்மேன்களும் ஒரு சிறிய பங்களிப்பை தொடர்ந்து கொடுத்தார்கள். இதனால் அவர்கள் ஒரு நல்ல ஸ்கோர் நோக்கி போக முடிந்தது. குறிப்பாக தேவைக்கு கொஞ்சம் அதிகமாகவே ரன்கள் எடுத்திருந்தார்கள்”
இதையும் படிங்க : தாயை இழந்து விட்டு.. எங்களுக்காக ஆட வந்த இவருக்கு வெற்றியை அர்ப்பணிக்கிறேன்.. ராயல் சல்யூட் – ருதுராஜ் பேச்சு
“இப்படிப்பட்ட ஒரு ஸ்கோரை நீங்கள் துரத்துவதற்கு ஒரு நல்ல பவர் பிளே உங்களுக்கு வேண்டும். ஆனால் நாங்கள் பவர் பிளேவில் விக்கெட்டுகளை இழந்து வேகத்தை இழந்து விட்டோம். அடுத்த போட்டியில் அணியில் மாற்றம் இருக்குமா என்றால் அது குறித்து நாங்கள் இதற்கு மேல் பேசி தான் முடிவு செய்ய வேண்டும். எங்களுக்கு அடுத்த போட்டிக்கு இன்னும் நாள் இருக்கிறது” என்று கூறி இருக்கிறார்






