ரகானே இந்த விஷயத்தை செய்ய வெட்கப்படக் கூடாது.. தப்பை ஒத்துக்கிட்டு உடனடியா இதை பண்ணுங்க – சேவாக் அறிவுரை

0
35
Rahane

நடப்பு ஐபிஎல் தொடரில் 5 போட்டிகள் விளையாடி இதுவரை ஒரு வெற்றியும் பெறாத அணியாக் கொல்கத்தா இருந்து வருகிறது. இந்த நிலையில் அந்த அணிக்கு வீரேந்தர் சேவாக் முக்கிய அறிவுரை ஒன்று கூறியிருக்கிறார்.

கடந்த ஏலத்தில் நியூசிலாந்தின் அதிரடி டி20 தொடக்க ஆட்டக்காரர்கள் பின் ஆலன் மற்றும் டிம் செய்பர்ட் இருவரையும் கொல்கத்தா வாங்கியது. ஆனால் தற்போது வரையில் பின் ஆலனுக்கு மட்டுமே வாய்ப்பு கொடுத்து வருகிறது.

- Advertisement -

தொடர் சொதப்பல்கள்

அதே சமயத்தில் கடந்த ஏலத்தில் மிக அதிகபட்ச விலை கொடுத்து ஆஸ்திரேலியா வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் கேமரூன் கிரீனை கொல்கத்தா வாங்கியது. ஆனால் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என அவர் எந்த தாக்கத்தையும் ஐந்து போட்டிகளாக ஏற்படுத்தவில்லை.

இந்த நிலையில் அவரை நீக்கி விட்டு இன்னொரு நியூசிலாந்து தொடக்க ஆட்டக்காரருக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என பலரும் பேசி வருகிறார்கள். இந்த நிலையில் வீரேந்த ஷேவாக் இது குறித்து முக்கிய ஆலோசனையை அவர்களுக்கு கூறியிருக்கிறார்.

- Advertisement -

வெட்கப்பட வேண்டாம்

இதுகுறித்து அவர் பேசும் போது ” நீங்கள் அதிகபட்ச விலை கொடுத்து கேமரூன் கிரீனை வாங்கி இருக்கிறீர்கள். நீங்கள் எதிர்பார்த்த அளவுக்கு அவர் செயல்படவில்லை. இப்போது அவரை வெளியே வைத்தால் இவ்வளவு விலை கொடுத்து வாங்கி ஏன் வெளியே வைக்கிறீர்கள் என்று கேட்பார்கள் என பயப்படுகிறீர்கள். அதனால் அவரைத் தொடர்ந்து வைத்து விளையாடுகிறீர்கள்”

இதையும் படிங்க : ருதுராஜை திட்டறீங்க.. தோனி கேப்டனா எல்லாம் மேட்சிலும் ரன் அடிச்சாரா?.. சிஎஸ்கே இத பண்ணிடாதீங்க – அஸ்வின் கோரிக்கை

“ஒரு வீரருக்கு எவ்வளவு விலை கொடுத்து வாங்கி இருந்தாலும் அவர் சரியாக விளையாடாத பொழுது அவரை உடனடியாக வெளியில் வைக்க வேண்டும். இதற்கு எந்த விதத்திலும் ரகானே வெட்கப்படக் கூடாது. உங்கள் தவறை ஏற்றுக்கொண்டு நீங்கள் இன்னொரு வீரருக்கு வாய்ப்பை கொடுக்க வேண்டும். எனவே அடுத்த போட்டியில் டிம் செய்பர்ட்டை சேர்க்க வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -