தற்போது சிஎஸ்கே அணியின் கேப்டன் மற்றும் தொடக்க ஆட்டக்காரர் ருதுராஜ் பேட்டிங் ஃபார்ம் மிகவும் சுமாராக இருந்து வருகிறது. இந்த நிலையில் ரவிச்சந்திரன் அஸ்வின் முக்கிய கோரிக்கை ஒன்றை வைத்து இருக்கிறார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் தொடர்ந்து ஐந்து போட்டிகளாக ருதுராஜ் ரன்கள் எடுக்கவில்லை. அவர் பேட்டிங் சரளமாக இல்லாமல் தடுமாற்றத்துடன் இருக்கிறது. மேலும் மிகவும் சுமாரான முறையில் ஆட்டம் இழந்து வெளியேறி வருகிறார்.
உடனடியாக நீக்க வேண்டும்
இந்த நிலையில் தற்போது சிறப்பாக விளையாடி வரும் சஞ்சு சாம்சன் உடன் இளம் வீரர் ஆயுஸ் மத்ரேவை தொடக்க ஆட்டக்காரராக களம் இறக்க வேண்டும் என சிஎஸ்கே ரசிகர்களே பெரிய அளவில் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் இப்பொழுது தான் சிஎஸ்கே அணி 2 போட்டிகளாக தொடர்ந்து வெற்றி பெற்று இருக்கிறது. இப்போது பேட்டிங் வரிசையில் ஏதாவது மாற்றத்தை செய்வது பிரச்சனையை உண்டாக்கலாம். எனவே தொடர்ந்து என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் பேசியிருக்கிறார்.
தோனி ரன் எடுத்தாரா?
இதுகுறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் பேசும்பொழுது “தோனி கேப்டனாக இருந்த பொழுது எல்லா போட்டியிலும் ரன் எடுத்தாரா? அப்படியெல்லாம் ரன் எடுக்க முடியாது. கேப்டன் பொறுப்பு தரும் அழுத்தத்தின் காரணமாக சில நேரங்களில் இப்படி நடப்பது இயல்புதான். தற்போது தொடர்ந்து இரண்டு வெற்றிகள் பெற்றிருப்பதால் சிஎஸ்கே அணியின் நம்பிக்கை அதிகரித்திருக்கும். ரசிகர்கள் அமைதியாக இருந்தால் ருதுராஜ் ரன்கள் எடுப்பார். அவரைத் தொடக்க இடத்தில் நீக்குவது சரியான முடிவு கிடையாது”
இதையும் படிங்க : திலக் வர்மாவின் ஐபிஎல் சம்பளத்தை வீணடித்த கேமரூன் கிரீன்.. கேகேஆர்-க்கு பெரிய அடி – என்ன நடந்தது?
“தற்போது கேப்டனாகவும் தொடக்க ஆட்டக்காரராகவும் இருக்கும் அவருக்கு சூழ்நிலைகள் சரியாக செல்லாத போது, அணி நிர்வாகம் ஆதரவு தராவிட்டால் எப்படி அவருடைய மனநிலை நம்பிக்கையாக இருக்கும்? இந்த மாதிரியான நேரத்தில் அவரை தொடக்க இடத்திலிருந்து நீக்கினால் சரி வருமா? அந்தத் தவறை சிஎஸ்கே செய்யக்கூடாது” என்று கூறியிருக்கிறார்.






