ஐபிஎல் 2025

ரோகித் ஓய்வு பெற இதுதான் காரணம்.. கம்பீர் அகர்கர் வேலையை காட்டிட்டாங்க – சேவாக் பேச்சு

இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக இருந்து வந்த ரோஹித் சர்மா நேற்று திடீரென சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இந்த நிலையில் அவருடைய திடீர் ஓய்வுக்கு என்ன காரணம் இருக்கலாம்? என சேவாக் பேசியிருக்கிறார்.

- Advertisement -

தற்போது இந்தியாவில் ஐபிஎல் தொடர் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடர் இந்த மாதம் இறுதியில் முடிவடைந்ததும் ஜூலை இருபதாம் தேதி இந்திய அணி இங்கிலாந்து சென்று அந்த அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட மெகா டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. இதற்கு முன்னதாக ரோஹித் சர்மா ஓய்வை அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.

ரோஹித்தே சொன்ன விஷயம்தான்

இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடிய பொழுது, பேட்டிங் ஃபார்ம் இல்லாத கேப்டன் ரோஹித் சர்மா திடீரென போட்டியிலிருந்து விலகிக் கொண்டார். ஆனாலும் தான் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறவில்லை என்றும் தொடர்ந்து விளையாடுவேன் என்றும் கூறியிருந்தார்.

தற்போது இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஷேவாக் கூறும்போது “இது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது ஏனென்றால் அவர் இங்கிலாந்து தொடருக்கு எப்படி தயாராகிறார் என்று பார்க்க இருந்தேன். மேலும் அவர் ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் ஐந்தாவது போட்டியை விளையாடாத போது, நான் எங்கும் செல்லவில்லை இங்கே தான் இருக்கிறேன் நான் ஓய்வு பெற்றது போல செய்தியை பரப்ப வேண்டாம் என்று கூறியிருந்தார்”

- Advertisement -

தேர்வுக்குழு செய்த காரியம்தான்

“இந்த நிலையில் தற்போது இடையில் என்ன நடந்திருக்கலாம்? ஒருவேளை தேர்வுக்குழு அவரை கேப்டன் பொறுப்புக்கு தேர்வு செய்யவில்லை என்றோ, அவரை அணியிலேயே தேர்வு செய்யவில்லை என்றோ முடிவு செய்திருக்கலாம். இதை அவரிடம் அவர்கள் கலந்து பேசி இருக்கலாம். இதனால் அவர் இந்த முடிவுக்கு வந்திருக்கலாம்”

இதையும் படிங்க : 20வது ஓவரில் நான்தான் பாட்ஷா.. யாருமே நெருங்க முடியாத சாதனையை வைத்திருக்கும் எம்எஸ் தோனி.. ரசிகர்கள் வியப்பு

“இன்னும் சில போட்டிகள் விளையாடி இருக்கலாம் என்கின்ற உணர்வு பொதுவாக எல்லோருக்குமே இருக்கும். சர்வதேச கிரிக்கெட்டில் 100 டெஸ்ட் போட்டிகள் சில உயர் அடுக்கு வீரர்கள் மட்டுமே விளையாடி இருக்கிறார்கள். ரோகித் சர்மாவும் அதை எட்ட விருப்பப்பட்டு இருக்கலாம். ஆனாலும் அவருடைய இந்த முடிவு புத்திசாலித்தனமானது. அவர் நல்ல முடிவை எடுத்திருக்கிறார்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -
Published by