நேற்று நடைபெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டிகள் சென்னை சூப்பர் கிங்ஸ் 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றியை பதிவு செய்துள்ளது.
இந்த வெற்றிக்கு இறுதி கட்டத்தில் சிக்சர் அடித்து வெற்றி பெறச் செய்த எம்எஸ் தோனி ரசிகர்கள் வியக்கும் அளவுக்கு சிறப்பான சாதனையை படைத்திருக்கிறார்.
சிஎஸ்கே சிறப்பான வெற்றி
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் குவித்தது. கொல்கத்தா அணியை பொருத்தவரை அதிகபட்சமாக கேப்டன் ரகானே 33 பந்துகளை எதிர்கொண்டு 48 ரன்கள் குவித்தார். இதில் 4 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர் அடங்கும். அதற்குப் பின்னர் ரசல் 21 பந்துகளை எதிர் கொண்டு 38 ரன்கள் குவித்தார்.
அதற்குப் பின்னர் வெற்றி இலக்கை நோக்கி சென்னை அணி களம் இறங்கியது. மூன்றாவது வரிசை ஆட்டக்காரர் உர்வில் பட்டேல் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 11 பந்துகளில் 31 ரன்கள் குவித்து வெளியேற, அதற்குப் பின்னர் களம் இறங்கிய டெவால்ட் பிரவிஸ் 25 பந்துகளில் 52 ரன்கள், சிவம் தூபே 40 பந்துகளில் 45 ரன்கள் குவித்தனர். 20 வது ஓவரில் எம்எஸ் தோனி சிக்ஸர் அடித்து சிஎஸ்கே அணியை வெற்றி பெற வைத்தார்.
20வது ஓவரில் இமாலய ரெக்கார்டு
இதனால் சென்னை அணி 19.4 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 183 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது. இந்த சூழ்நிலையில் மகேந்திர சிங் தோனி 20வது ஓவரில் அபாரமான ரெக்கார்ட் ஒன்றை வைத்து இருக்கிறார். அதாவது போட்டியின் இறுதிக்கட்டமான கடைசி ஓவரில் மட்டும் 71 சிக்ஸர்கள் அடித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஐபிஎல் வரலாற்றில் இன்னமும் தோனியின் சாதனையை ஒருவரால் கூட நெருங்க முடியவில்லை.
இதையும் படிங்க:வாய்ப்பு கிடைக்காம டிவியில் கிரிக்கெட் பார்த்துக் கொண்டிருந்தேன்.. இது எல்லாமே அவரோட பிளான்தான் – டெவால்ட் ப்ரவிஸ்
தோனிக்கு அடுத்த இடத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் அதிரடி பேட்ஸ்மேன் கீரன் பொல்லார்ட் 33 சிக்ஸர்கள் அடித்திருக்கிறார். அவருக்கு அடுத்த இடத்தில் சிஎஸ்கே அணியின் ரவீந்திர ஜடேஜா 32 சிக்சர்கள் அடித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே எம்எஸ் தோனியின் இத சாதனையை முறியடிக்க குறைந்தது ஒருவருக்கு 10 வருடங்களாவது தேவைப்படும் என ரசிகர்கள் வியக்கிறார்கள்.






