நேத்து கேப்டனா கில் செஞ்ச ஒரு வேலையை.. இந்த ஐபிஎல்ல வேற எந்த கேப்டனும் செய்ய மாட்டாங்க – அஸ்வின் பாராட்டு

0
18
Ashwin

நேற்று ஐபிஎல் தொடரில் பலமான ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் அணி சிறப்பான வெற்றியை பெற்றது. இதற்கு கேப்டனாகவும் பேட்ஸ்மேன் ஆகவும் கில் பங்களிப்பு முக்கியமானதாக இருந்தது. இது குறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் பாராட்டி இருக்கிறார்.

இந்த போட்டியில் கில் ஆன்பீல்ட் கேப்டன்சி சிறப்பான முறையில் இருந்தது. மேலும் இரண்டாவதாக பேட்டிங் செய்யும் பொழுது பவர் பிளேவில் சிறப்பாக விளையாடி 18 பந்தில் 43 ரன்கள் எடுத்தார்.

- Advertisement -

குஜராத் பலம்

குஜராத் பேட்டிங் வரிசையில் மிடில் ஆர்டர் மிகவும் பலவீனமாக உள்ளது. இருந்தபோதிலும் கூட அந்த அணி தற்போது 10 புள்ளிகள் உடன் ஐந்தாவது இடத்தில் புள்ளி பட்டியலில் இருக்கிறது. இதற்கு டாப் ஆர்டரில் முதல் மூன்று பேர் சிறப்பான முறையில் ரன் எடுத்து வருகிறார்கள்.

இன்னொரு பக்கத்தில் குஜராத் பவுலிங் யூனிட்டில் பந்துவீச்சு மிகவும் சிறப்பாக உள்ளது. குறிப்பாக ரபாடா மணிக்கு 150 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் நான்கு ஓவர்களும் வீசுகிறார். பயிற்சியாளர் நெக்ரா அறிவுறுத்தலின் கீழ் அவர் மிகவும் சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறார்.

- Advertisement -

வேறு யாரும் செய்ய மாட்டார்கள்

இது குறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் பேசும்போது ” நேற்று ரபாடா தனது முதல் ஓவரில் மொத்தம் 21 ரன்கள் கொடுத்தார். திரும்பி இரண்டாவது ஓவருக்கு வந்த அவர் விராட் கோலி டிக்கெட்டை கைப்பற்றி நல்ல மொமண்டத்தை கொடுத்தார். அந்த ஓவரில் மொத்தமாக ஐந்து பவுண்டரிகளை விராட் கோலி அடித்திருந்தார்”

இதையும் படிங்க : விராட் கிட்ட கத்துக்கிட்ட அந்த வித்தைய வச்சு கில் ஆர்சிபியை முடிச்சார்.. இந்த பிளான் அருமையா இருந்தது – சேவாக் பாராட்டு

“இந்த இடத்தில் ரபாடா இரண்டாவது ஓவர் வீசாமல் இருந்திருந்தால் போட்டியில் முடிவே மாறி இருக்கும். கேப்டனாக கில் அவர் முதல் ஓவரில் 20 ரன்கள் மேல் கொடுத்திருந்தாலும் கூட இரண்டாவது ஓவரையும் தொடர்ந்து கொடுத்தார். இந்த ஐபிஎல் தொடரில் வேறு எந்த கேப்டன்களும் இந்த முடிவுக்கு வந்திருக்க மாட்டார்கள். உடனடியாக பவுண்டரி லைனில் தூரமாக போய் நில் என்று பவுலரை அனுப்பி விடுவார்கள்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -