லெஜெண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடர் என முன்னணி லெஜன்ட் வீரர்களைக் கொண்டு பிரத்தியேகமாக ஒரு தொடர் வருகிற ஜனவரி 20 முதல் 29ஆம் தேதி வரை ஓமனில் உள்ள மஸ்கத்தில் நடைபெற உள்ளது. இந்தத் தொடரின் அனைத்துப் போட்டிகளும் மஸ்கத்தில் உள்ள அல் அமீரத் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற போகின்றது.
இந்த தொடரில் இந்தியா மகாராஜா, ஆசியா லயன்ஸ் மற்றும் வேர்ல்ட் ஜெய்ன்ட்ஸ் என மூன்று அணிகள் பங்கேற்று விளையாடி போகின்றன.
தொடரில் இரண்டு சுற்றுகள் முதலில் ஆரம்பித்து பின்னர் இறுதிப் போட்டி நடைபெற இருக்கிறது. ஒவ்வொரு சுற்றிலும் தலா மூன்று போட்டிகள் நடைபெற போகின்றது. மூன்று அணிகளும் தங்களுடைய எதிரணிகளை தலா இரண்டு முறை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். 2 சுற்றில் நடைபெற்ற 6 போட்டிகளில் முடிவில் எந்த 2 அணிகள் முதல் இரண்டு இடத்தை பிடிக்கின்றதோ, அந்த இரண்டு அணிகள் இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை மேற்கொள்ளும்.
இந்தியா மகாராஜா அணியில் சேவாக் மற்றும் யுவராஜ் சிங்
விரேந்திர சேவாக், ஹர்பஜன் சிங், யுவராஜ் சிங், இர்பான் பதான், யூசப் பதான் என இந்திய முன்னணி நட்சத்திர வீரர்களுடன் இந்தியா மகராஜா அணி களம் இறங்க போகிறது. இந்த அணியில் சச்சின் டெண்டுல்கர் விளையாடும் அதிக வாய்ப்பு உள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.
ஆசியாவை மையப்படுத்தி களம் இறங்கப் போகும் ஆசியா அணியில்
சோயப் அக்தர், ஷாகித் அப்ரிடி, சனத் ஜெயசூரியா, முத்தையா முரளிதரன், சமிந்தா வாஸ், உபுல் தரங்கா, தில்ஷன், சோயப் மாலிக் என பல்வேறு முன்னணி கிரிக்கெட் வீரர்கள் களம் இறங்கி விளையாட போகின்றனர்.
இந்த தொடரின் தூதவராக அமிதாப் பச்சன் நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரரும், முன்னாள் இந்திய தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி இந்த தொடரின் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த தொடர் குறித்து கூடுதல் விவரங்கள் இன்னும் சில நாட்களில் அடுத்தடுத்து வெளியாகும் என்று நாம் எதிர்பார்க்கலாம்.
2022 லெஜெண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடர் போட்டி அட்டவணை :
( முதல் சுற்று )
ஜனவரி 20 : இந்தியா மகாராஜா vs ஆசியா லயன்ஸ்
ஜனவரி 21 : வேர்ல்ட் ஜெய்ன்ட்ஸ் vs ஆசியா லயன்ஸ்
ஜனவரி 22 : இந்தியா மகாராஜா vs வேர்ல்ட் ஜெய்ன்ட்ஸ்
( இரண்டாம் சுற்று )
ஜனவரி 24 : ஆசியா லயன்ஸ் vs இந்தியா மகாராஜா
ஜனவரி 26 : இந்தியா மகாராஜா vs வேர்ல்ட் ஜெய்ன்ட்ஸ்
ஜனவரி 27 : வேர்ல்ட் ஜெய்ன்ட்ஸ் vs ஆசியா லயன்ஸ்
ஜனவரி 29 : ( இறுதிப்போட்டி )