தோனி இருந்திருந்தால் கதையே வேறு – வீரேந்திர சேவாக்!

0
204
Msd

இந்திய அணி நேற்று ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கை அணியுடன் ஒரு பரபரப்பான ஆட்டத்தில், பாகிஸ்தான் அணியுடன் எப்படி தோற்றதோ அதேபோல் தோற்று இறுதிப் போட்டிக்கான வாய்ப்பில் இருந்து ஏறக்குறைய வெளியேறிவிட்டது.

ஆசிய கோப்பையில் இந்திய அணியின் செயல்பாடு இந்திய அணியின் ரசிகர்களையும் தாண்டி இந்திய அணியின் முன்னால் வீரர்கள் மற்றும் இந்நாள் வீரர்களையும் மிகவும் ஏமாற்றமடைய செய்திருக்கிறது. இதன் காரணமாக பல வீரர்கள் தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொண்டு வருகிறார்கள்.

- Advertisement -

இந்த தோல்வி குறித்து இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறும்போது, நிறைய பரிசோதனை முயற்சிகள் செய்ததின் மூலமாகத்தான் நிறைய பதில்கள் எங்களுக்கு கிடைத்தது. இந்த தொடரில் கூட அர்ஸ்தீப் சிங் அதனால் தான் மீண்டு வந்தார். நாங்கள் ஒரு வலுவான அணி தான். மீதி இருக்கும் எல்லா கேள்விக்கும் உலக கோப்பையில் பதில் சொல்வோம் என்று கூறியிருந்தார்.

நேற்றைய போட்டியில் கடைசி 4 ஓவர்களில் 42 ரன்கள் தேவைப்பட்ட பொழுது, ரோகித் சர்மா தவறான பந்துவீச்சாளர் வரிசையை பயன்படுத்தி விட்டார் என்று தான் கூற வேண்டும். அவர் ஹர்திக் பாண்டியாவை கடைசி ஓவருக்கு கொண்டு போயிருக்க வேண்டும். குறைந்தபட்சம் அர்ஸ்தீப் சிங்கை 19-வது ஓவரை வீச வைத்திருக்க வேண்டும். ஆனால் அவர் இரண்டையுமே செய்யவில்லை.

பாகிஸ்தான் ஆட்டத்தின்போது கடைசி ஓவரில் அர்ஸ்தீப் சிங்கிடம் 6 பந்துகளுக்கு 7 ரன்கள் என்று பந்தை கொடுத்தது போலவே, நேற்றைய போட்டியிலும் பந்து கொடுக்கப்பட்டது. இவர் பாகிஸ்தான் அணியுடன் கடைசி ஓவரை மிகச்சிறப்பாக வீசியது போலவே நேற்றும் வீசினார். இரண்டு பந்துகளுக்கு இரண்டு ரன்கள் தேவை என்ற நிலையில், வீசப்பட்ட கடைசி ஓவரின் 5-வது பந்தை இலங்கை கேப்டன் அடிக்கத் தவறினார், அந்தப் பந்து விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் இடம் சென்றது. இந்த நேரத்தில் எதிர்முனையில் இருந்த ராஜபக்சே ரன் எடுக்க ஓடி வந்தார், பந்தை பிடித்த ரிஷப் பண்ட் அதை ஸ்டம்ப் நோக்கி சரியாக அடிக்கவில்லை. பந்தை பிடித்த பந்து வீச்சாளரும் சரியாக அடிக்கவில்லை. இதனால் இரண்டு ரன்கள் போய் இலங்கை வெற்றியும் பெற்று விட்டது.

- Advertisement -

இம்மாதிரியான நேரங்களில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன், விக்கெட் கீப்பருமான மகேந்திர சிங் தோனி, தனது வலது கையை உறையைக் கழட்டி விடுவார், இதனால் கடைசி நேரத்தில் பந்தை எறிவது அவருக்கு சுலபமாக இருக்கும். ஆனால் ரிஷப் பண்ட் இப்படி செய்யவில்லை.

தற்போது இது குறித்து இந்திய அணியின் முன்னாள் அதிரடி துவக்க ஆட்டக்காரர் வீரேந்திர சேவாக் தனது கருத்தை முன்வைத்திருக்கிறார். அவர் கூறும் பொழுது இந்திய அணிக்கு அதிர்ஷ்டம் இல்லை என்றும், மகேந்திர சிங் தோனி போல இவர்களுக்கு செயல்படத் தெரியவில்லை என்றும் கூறியிருக்கிறார்.

வீரேந்திர சேவாக் கூறும்பொழுது “இரண்டு பந்துகளுக்கு இரண்டு ரன்கள் தேவைப்பட்ட பொழுது ரிஷப் பண்ட் அதை தவற விட்ட பொழுது அது இந்திய அணிக்கு துரதிஷ்டமாக அமைந்துவிட்டது. அவர் ஸ்டம்பை சரியாக தாக்கி இருந்தால், புதிய பேட்ஸ்மேன் களத்திற்கு வந்திருப்பார், ஒரு பந்துக்கு இரண்டு ரன்கள் தேவை என்ற நிலை உருவாகி இலங்கை அணியின் மீது அழுத்தம் அதிகரித்து இருக்கும். இதுபோன்ற நேரங்களில் மகேந்திர சிங் தோனி பல பேட்டர்களை ரன்அவுட் செய்திருக்கிறார். தற்போது இந்திய அணிக்கு அதிர்ஷ்டம் இல்லை என்று தான் கூற வேண்டும் ” என்று கூறியிருக்கிறார்!