இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்த நிலையில், வெலிங்டன் பிட்ச் குறித்து நியூசிலாந்து முன்னாள் வீரர் ஸ்காட் ஸ்டைரிஸ் கடுமையாக விமர்சித்துள்ளார்.
பேட் மற்றும் பந்துக்கு இடையிலான சமமான போட்டி இந்த ஆடுகளத்தில் கிடைக்கவில்லை என ஸ்காட் ஸ்டைரிஸ் கருத்து தெரிவித்துள்ளார். மேலும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலிலும் இந்த டிரா பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து ஸ்காட் ஸ்டைரிஸ் பேசும்போது “இந்த பிட்ச் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு போதுமானதாக இல்லை. நாம் அதை சொல்லலாம் என்று நினைக்கிறேன். பேட் மற்றும் பந்துக்கு இடையே ஒரு நல்ல சமமான போட்டியை நாம் விரும்புகிறோம். அது நமக்கு கிடைக்கவில்லை”
“முதல் நாள் காலை நேரம் பவுலர்களுக்கு நல்ல வாய்ப்பு இருந்தது. இருப்பினும் அது மிக நீண்ட காலம் நீடிக்கவில்லை, அதுதான் பிரச்சனையாக இருந்தது இது இந்த மைதானப் பணியாளர்களுக்கான முதல் டெஸ்ட் போட்டி. இங்கே பேசின் ரிசர்வில் அவர்களுக்கு ஒரு புதிய குழு உள்ளது, அது எப்படி செயல்படும் என்று அவர்களுக்குத் தெரியவில்லை. எனவே அவர்கள் அதிலிருந்து கற்றுக்கொண்டு மேலும் மேலும் சிறப்பாக செயல்படுவார்கள் என்று நினைக்கிறேன்” என்றும் கூறி இருக்கிறார்.






