முதல் டெஸ்ட் போட்டியில் முகமது சிராஜ் மற்றும் ஜடேஜாவை அணியில் சேர்க்காதது குறித்து இந்திய கேப்டன் சுப்மன் கில் பேசியிருக்கிறார்.
நீண்டகால நண்பர்களும் உடன் ஆடிய வீரர்களுமான இருவரையும் நீக்கிய முடிவு கடினமானதாக இருந்தாலும், தற்போதைய பார்ம் அடிப்படையிலேயே அணி தேர்வு செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
இதுகுறித்து கில் பேசும்போது “சிராஜ் எனக்கு மிகவும் நெருங்கிய நண்பர், அவரை அணியில் இருந்து நீக்கியது மிகவும் கடினமான முடிவாக இருந்தது. ஜடேஜாவுக்கும் இது பொருந்தும். நாங்கள் இருவரும் சேர்ந்து நிறைய கிரிக்கெட் ஆடியிருக்கிறோம், நீண்ட காலமாக எனக்கு அவர்களைத் தெரியும். டெஸ்டுக்கு முன்பே இருவரிடமும் பேசி முடிவுக்குப் பின்னால் உள்ள காரணங்களை விளக்கினேன். அவர்கள் சூழலைப் புரிந்து கொண்டார்கள்” என்று கூறி இருக்கிறார்.
மேலும் அவர் தொடரும்போது “ஒவ்வொரு வீரரும் தங்கள் சிறந்த நிலையில் இல்லாத ஒரு காலகட்டத்தைக் கடந்து செல்கிறார்கள், தற்போதைய பார்ம் அடிப்படையில் நாங்கள் அணியைத் தேர்ந்தெடுக்கிறோம். ஜடேஜாவும் முகமது சிராஜும் அணியில் இருந்திருந்தால் இந்தப் போட்டியில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியிருப்பார்கள் என்று நான் நினைக்கவில்லை” என்று கூறி இருக்கிறார்.






