இந்திய கிரிக்கெட்

கம்பீருக்கு கட்டாயம் இந்த விஷயத்துல விராட் கோலி உதவி தேவை.. பொறுத்திருந்து பாருங்க – ஸ்காட் ஸ்டைரிஸ் கருத்து

இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் வந்திருக்கும் நிலையில், விராட் கோலிக்கும் அவருக்கும் இடையேயான உறவு எப்படி இருக்கும் என்பது குறித்து பொறுத்திருந்து பார்க்க வேண்டும் என நியூசிலாந்து முன்னாள் ஆல்ரவுண்டர் ஸ்காட் ஸ்டைரிஸ் கூறியிருக்கிறார்.இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் வந்திருக்கும் நிலையில், விராட் கோலிக்கும் அவருக்கும் இடையேயான உறவு எப்படி இருக்கும் என்பது குறித்து பொறுத்திருந்து பார்க்க வேண்டும் என நியூசிலாந்து முன்னாள் ஆல்ரவுண்டர் ஸ்காட் ஸ்டைரிஸ் கூறியிருக்கிறார்.

- Advertisement -

விராட் கோலி மற்றும் கம்பீர் இருவரும் ஐபிஎல் தொடரில் இரண்டு முறை வாய்த் தகறாறில் ஈடுபட்டு இருக்கிறார்கள். கடைசியாக 2023 ஆம் ஆண்டு லக்னோ மைதானத்தில் நடைபெற்ற மோசமான விஷயங்கள் ஒட்டுமொத்த உலக கிரிக்கெட் களத்தையே சூடு படுத்தி இருந்தது.

இந்த நிலையில் கம்பீர் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்புக்கு போட்டியிடுவார் என்று கூறப்பட்ட ஆரம்பத்திலேயே விராட் கோலி உடன் அவருக்கான உறவு எப்படி இருக்கும் என்கின்ற பெரிய சந்தேகம் நிலவி வந்தது. இந்த நிலையில் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் போது இருவரும் பயிற்சியில் சந்தித்து பேசிக்கொண்டு சமாதானமானார்கள்.

மேலும் கம்பீர் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக வந்துவிட்டார். நாளை முதல் விராட் கோலி உடன் இணைந்து இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கு கம்பீர் பயிற்சியாளராக வேலையை ஆரம்பிப்பார். இவர்கள் இருவருக்கும் இடையேயான உறவு எப்படி இருக்கும் என நியூசிலாந்து முன்னாள் ஆல்ரவுண்டர் ஸ்காட் ஸ்டைரிஸ் பேசியிருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் பேசும் பொழுது “இருவருக்கும் இடையேயான உறவு எப்படி இருக்கும் என்று நாம் பொறுத்திருந்து பார்க்க வேண்டும் என்று நினைக்கிறேன். யாரும் இங்கு உட்கார்ந்து அவர்களுக்குள் நன்றாக உறவு இருக்கும் இல்லை இருக்காது என்று சொல்ல முடியாது. நிச்சயமாக கம்பீர் இந்திய அணியை இயக்க நினைக்கும் விதத்திற்கும், இளைய வீரர்களுக்கு உதவி செய்யவும் விராட் கோலி உதவியை நாடியே தீர வேண்டும்.

இந்திய இதையும் படிங்க : இந்திய அணிக்கு எதிரா.. இலங்கை பிளேயர்ஸ் ஸ்கூல் குழந்தைங்களா மாறிட்டாங்க – பாக் கம்ரன் அக்மல் பேச்சு

எனவே இந்த உறவு குறித்து நமக்கு தெரியாது. இருவருமே இரண்டு விதமானவர்கள் மேலும் இரண்டு விதமான அதிகாரத்தைக் கொண்டிருக்கக் கூடியவர்கள். இவர்கள் அணிக்குள் எப்படி இயங்கப் போகிறார்கள் என்று பார்க்க வேண்டும். ஆனால் இதற்கு முன்பாக இவர்கள் இருவருமே சிறந்த கிரிக்கெட்டர்கள். நல்ல கிரிக்கெட் மூளை கொண்டவர்கள். இவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் தங்களின் செயல்பாட்டுக்கும் அணிக்கும் உதவுவதற்கு புத்திசாலிகளாக செயல்படுவார்கள் என்று நினைக்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -
Published by

Recent Posts