சச்சின் போன்ற முழுமையான வீரராக இந்த இளம் வீரர் வருவார் – ஸ்காட் ஸ்டைரிஸ்

0
118
Scott styris

இந்திய கிரிக்கெட்டின் தடுப்புச் சுவர் என்று புகழப்படும் ராகுல் டிராவிட் இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக வந்ததில் இருந்து, பல வீரர்கள் பரிசோதிக்கப்பட்டு வருகிறார். மூன்று வடிவ கிரிக்கெட்டிற்கும் சரியான வீரர்களையும் மாற்று வீரர்களையும் கண்டறியும் முயற்சிகள் தொடர்ந்து வருகின்றன. இதெல்லாம் இந்திய கிரிக்கெட் அணியின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு செய்யப்படுகிறது!

இந்த வகையில் ஷிகர் தலைமையில் வெஸ்ட் இன்டீஸ் அணியுடனான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கு அறிவிக்கப்பட்ட இந்திய அணிமில் இளம் துவக்க வீரர் சுப்மன் கில்லின் பெயரும் இடம்பெற்றது. ருதுராஜ் கெய்க்வாட் அணியில் இருந்தம் சுப்மன் கில்லுக்கே மூன்று போட்டிகளிலும் வாய்ப்பளிக்கப்பட்டது. சுப்மன் கில்லும் கொடுக்கப்பட்ட வாய்ப்புகளை மிகச்சரியாகப் பயன்படுத்திக்கொண்டார். முதல் ஆட்டத்தில் ஒரு அரைசதம், அடுத்த ஆட்டத்தில் ஒரு நாற்பது ரன்கள், கடைசி மூன்றாவது ஆட்டத்தில் ஆட்டமிழக்காமல் 98 ரன்கள் எடுத்து, துரதிஷ்டவசமாக தனது முதல் சர்வதேச அரைசதத்தைத் தவறவிட்டார். ஆனாலும் தொடர் நாயகன் விருதை பெற்றார்!

- Advertisement -

சுப்மன் கில் அபரிமிதமான பேட்டிங் திறமைகள் கொண்ட வீரராகக் காணப்படுகிறார். இவரின் ஆரம்பக் காலக்கட்டத்தில் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சினின் வழிக்காட்டுதல் கிடைக்கப் பெற்றிருக்கிறது. இந்திய அணியின் ரன் மெசின் விராட் கோலி சுப்மன் கில்லின் திறமைகளை வெகுவாகப் புகழ்ந்து பேசியிருக்கிறார். நியூசிலாந்து அணியின் முன்னாள் ஆல் ரவுண்டர் ஸ்காட் ஸ்டைரிஸ் சுப்மன் கில் மீது மிகவும் நம்பிக்கை வைத்திருக்கிறார். அவரின் பிடித்தமான இளம் வீரர் சுப்மன் கில் ஆவார்!

இவர் சச்சின் 200 டெஸ்ட் என்ற நிகழ்ச்சியில் பங்குபெற்ற போது, சச்சின் பற்றியும், சுப்மன் கில்லை முழுமையான வீரர் என்று கூற முடியுமா? என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு நீண்ட தன் விளக்கத்தை ஸ்காட் ஸ்டைரிஸ் கொடுத்திருக்கிறார்!

அவர் சுப்மன் கில்லை ஒரு முழுமையான வீரர் என்று கூறமுடியுமா? என்று கேட்டதிற்குப் பதிலளித்தார். அதில் அவர் “வளர்ந்து வரும் திறமையான இளம் வீரர் ஒருவருக்கு நீங்கள் முழுமையான வீரர் என்று முத்திரை குத்தமாட்டிர்கள் என்று நினைக்கிறேன். சச்சின் தனது கடைசி 200 போட்டி வரையிலுமே அவர் கற்பதை நிறுத்தவில்லை. அவர் இறுதிவரை கற்றார். சுப்மன் கில்லின் பேட்டிங் நுட்பத்தில் சில குறைகள் இருப்பதாக உணர்கிறேன். எதிரணி வீரர்கள் அந்தக் குறைகளைப் பயன்படுத்திக்கொள்ள முடியும். ஆனால் அவர் அனைத்து அடிப்படை திறன்களையும் பெற்றிருக்கிறார். மன உறுதி, செயல்திறன், முதிர்ச்சி, தலைமைத்துவம் போன்றவைகள்தான் ஒரு உலகத்தரமான வீரரை உருவாக்குகிறது. இதெல்லாம் சுப்மன் கில் இடம் இருப்பதாக உணர்கிறேன்” என்று கூறியிருக்கிறார்!

- Advertisement -