2023 WTC பைனலில் செஞ்சத.. விராட் கோலிக்கு திரும்பவும் செய்வேன் – ஆஸி ஸ்காட் போலன்ட் சவால்

0
127
Boland

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதிக் கொள்ளும் ஐந்து போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடர் நெருங்க நெருங்க அதைச் சுற்றி மிகுந்த பரபரப்பு உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஸ்காட் போலண்ட் விராட் கோலியை மீண்டும் ஆட்டம் இழக்க செய்ய முடியும் என்று கூறி இருக்கிறார்.

இந்திய அணி நவம்பர் மாதத்தில் ஆஸ்திரேலியாவிற்கு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கு சுற்றுப்பயணம் செய்கிறது. முதல் டெஸ்ட் போட்டி பெர்த் மைதானத்தில் நவம்பர் 22ஆம் தேதி நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து நான்கு டெஸ்ட் போட்டிகள் அடிலெய்ட், பிரிஸ்பேன், மெல்போன் மற்றும் சிட்னி மைதானங்களில் நடைபெறுகின்றன.

- Advertisement -

பத்தாண்டு ஆஸி சோகம்

இந்திய அணிக்கு எதிராக ஆஸ்திரேலிய அணி 2014 ஆம் ஆண்டு டெஸ்ட் தொடரை கைப்பற்றி இருந்தது. அதற்குப் பிறகு 10 ஆண்டுகளாக ஒரு தசாப்த காலமாக ஆஸ்திரேலியா அணியால் இந்திய அணிக்கு எதிராக டெஸ்ட் தொடரை கைப்பற்ற முடியவில்லை. அவர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் நான்கைந்து ஆண்டுகளாக உச்சத்தில் இருந்த பொழுதும் இந்திய அணியிடம் மட்டுமே மிகப்பெரிய அளவில் தோற்று வருகிறார்கள்.

இந்த நிலையில் இந்த முறை உள்நாட்டில் இந்திய அணிக்கு எதிராக டெஸ்ட் தொடரை எப்படியும் கைப்பற்றுவது என்று மிகச் சிறப்பான முறையில் தயாராகி வருகிறார்கள். இந்திய வீரர்களைப் போல் ஆஸ்திரேலியா வீரர்களுக்கும் சரியான முறையில் தற்போது ஓய்வு கொடுக்கப்பட்டிருக்கிறது. கடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விராட் கோலியை வீழ்த்திய ஸ்காட் போலண்ட் தற்பொழுதும் விராட் கோலியை வீழ்த்த முடியும் என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -

விராட் கோலி விக்கெட் கிடைக்கும்

இதுகுறித்து காட் போலண்ட் கூறும் பொழுது “நாங்கள் இந்திய அணியை வீழ்த்த முடியும் என்று நினைக்கிறேன். மேலும் வெளிப்படையாக நாங்கள் உலக தரம் வாய்ந்த வேகப்பந்து வீச்சு தாக்குதலை வைத்திருக்கிறோம். அவர்களிடமும் சில உலகத்தரம் வாய்ந்த வேகப்பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள். ஆனால் நாங்கள் எங்களுடைய நாட்டில் சூழ்நிலை பயன்படுத்தி அவர்களை வெல்வோம்.

இதையும் படிங்க : 102 ரன்ஸ் தேவை.. கிரிக்கெட் வரலாற்றில் கோலி ரோகித் மட்டுமே செய்த சாதனை.. பாபர் அசாமுக்கு பெரிய வாய்ப்பு

விராட் கோலி விக்கெட்டை கைப்பற்றுவது எளிது என்று நான் சொல்ல மாட்டேன். அவருடைய விக்கெட்டை கைப்பற்றியது மகிழ்ச்சியாக இருந்தது. மீண்டும் அவரது விக்கெட்டை கைப்பற்றுவதற்கான வாய்ப்பு எனக்கு இருக்கிறது. நாங்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் கோடைக்காலம் இது கிடையாது. சீசன் மிக விரைவாக வர இருக்கிறது. இதற்காக நான் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -