13 ஓவரில் 153 ரன்.. இங்கிலாந்தை மிரள விடும் ஸ்காட்லாந்து.. ஓமான் பரிதாபமாக வெளியேறியது

0
456
Scotland

நேற்று டி20 உலகக்கோப்பை தொடரில் பி பிரிவில் ஸ்காட்லாந்து மற்றும் ஒமான் அணிகள் மோதிக்கொண்ட முக்கிய போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் 151 ரன்கள் நோக்கி விளையாடிய ஸ்காட்லாந்து இலக்கை 13 புள்ளி ஒன்று ஓவர்களில் எட்டி அசத்தியது. இதன் காரணமாக இங்கிலாந்துக்கு பெரிய தலைவலி உண்டாகி இருக்கிறது.

இந்த போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற ஒமான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியின் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் பிரடிக் அதவாலே 40 பந்துகளில் 54 ரன்கள் எடுத்தார். பேட்டிங் வரிசையில் ஆறாவதாக வந்த அயான் கான் 39 பந்துகளில் 41 ரன்கள் எடுத்தார். 20 ஓவர்களில் ஒமான் அணி ஏழு விக்கெட் இழப்புக்கு 150 ரன்கள் எடுத்தது.

- Advertisement -

இதற்கு அடுத்து இலக்கை நோக்கி விளையாடிய ஸ்காட்லாந்து அணிக்கு துவக்க ஆட்டக்காரர் முன்சே அதிரடியாக 20 பந்துகளில் 41 ரன்கள் எடுத்தார். மற்றும் ஒரு துவக்க ஆட்டக்காரர் மைக்கேல் ஜோன்ஸ் 13 பந்தில் 16 ரன்கள் எடுத்தார். இந்த நிலையிலும் கூட ஆட்டம் ஓரளவுக்கு ஒமான் கட்டுப்பாட்டில் இருந்தது.

இதற்கு அடுத்து பேட்டிங்கில் ஸ்காட்லாந்து அணிக்கு மூன்றாவதாக வந்த பிரண்டன் மெக்முலன் 31 பந்துகளில் அதிரடியாக ஒன்பது பவுண்டரிகள் மற்றும் இரண்டு சிக்ஸர்கள் உடன் 61 குவித்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். ஸ்காட்லாந்து அணி 13.1 ஓவரில் இலக்கை எட்டி, ஏழு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

- Advertisement -

இந்த பி பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, நமிபியா மற்றும் ஒமான் அணிகள் இடம் பெற்று இருக்கின்றன.இதில் ஸ்காட்லாந்து அணி நமிபியா மற்றும் ஒமான் அணிகளுக்கு எதிராக வெற்றியும், மழையின் காரணமாக இங்கிலாந்து அணிக்கு எதிராக டிராவும் செய்திருக்கிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இன்னும் ஒரு போட்டி எஞ்சி இருக்கிறது. அதே சமயத்தில் இங்கிலாந்து ஸ்காட்லாந்து அணிக்கு எதிராக டிரா, ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக தோல்வி அடைந்திருக்கிறது. அந்த அணிக்கு இன்னும் போட்டிகள் நமிபியா மற்றும் ஒமான் அணிகளுக்கு எதிராக இருக்கிறது.

இதையும் படிங்க : ரோகித் செய்த 3 தவறுகள்.. மீறி கிடைத்த 2 டர்னிங் பாயிண்ட்.. இந்தியா பாகிஸ்தானுக்கு எதிராக வென்றது எப்படி?

தற்போது மூன்று ஆட்டங்களில் இரண்டு வெற்றி ஒரு டிரா உடன் 5 புள்ளிகள் எடுத்து இருக்கும் ஸ்காட்லாந்து அணியின் ரன் ரேட் +2.164 என்று பயங்கரமாக இருக்கிறது. அதுவே ஒரு டிரா ஒரு தோல்வியுடன் ஒரு புள்ளி எடுத்து இருக்கும் இங்கிலாந்தின் ரன் ரேட் மைனஸ் 1.800 என மோசமாக இருக்கிறது. ஸ்காட்லாந்து அணி தன்னுடைய கடைசி போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மோசமாக தோற்க வேண்டும், அதே சமயத்தில் இங்கிலாந்து அணி தன்னுடைய கடைசி இரண்டு ஆட்டத்தில் மிகப்பெரிய ரன் ரேட்டில் வெல்ல வேண்டும். இல்லையென்றால் இங்கிலாந்து பரிதாபமாக வெளியேற வேண்டியது வரும் என்பது குறிப்பிடத்தக்கது!

- Advertisement -