“என்னையை ஏண்டா கோர்த்து விடுறீங்க”…..? கில் பற்றிய பதிவிற்கு விளக்கம் அளித்த சவுரவ் கங்குலி!

0
657

2023 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் போட்டி இறுதிக்கட்டத்தை எட்டி இருக்கிறது . தற்போது பிளே ஆப் சுற்றுக்கான போட்டிகள் நடைபெற்று வருகின்றன

நேற்று நடைபெற்ற முதல் போட்டியில் சென்னை அணி குஜராத்தை 15 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது . இன்று நடைபெற இருக்கும் போட்டியில் மும்பை மற்றும் லக்னோ பணிகள் விளையாட இருக்கின்றன இந்த போட்டியில் வெற்றி பெருமானே வெள்ளிக்கிழமை நடைபெற இருக்கும் போட்டியில் குஜராத் அணியை எதிர்த்து விளையாடும்.

- Advertisement -

முன்னதாக நடைபெற்ற கடைசி லீக் ஆட்டத்தில் குஜராத் அணி பெங்களூர் அணியை ஆரம்பிக்கட்டுகள் வித்தியாசத்தில் தோற்கடித்தது . அந்தப் போட்டியில் குஜராத் அணியின் சுப்மன் கில் மிகச் சிறப்பாக ஆடி 52 பந்துகளில் 104 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். இந்த வருட ஐபிஎல் தொடரில் அவர் அடிக்கும் இரண்டாவது சதம் இதுவாகும் .

அவரின் ஆட்டத்தை கிரிக்கெட் விமர்சகர்களும் முன்னாள் வீரர்களும் வெகுவாக பாராட்டினர். இந்நிலையில் அவரது பேட்டிங் குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் முன்னாள் பிசிசிஐ தலைவர்மான சௌரவ் கங்குலி தனது ட்விட்டர் மூலம் வெகுவாக பாராட்டி இருந்தார் . இதுகுறித்து பதிவு செய்திருந்த அவர்” ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஒவ்வொரு வருடமும் அபாரமான திறமை உள்ள வீரர்களை இனம் கண்டுகொள்ள உதவுகிறது . இதுதான் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளின் அழகு என பதிவு செய்திருந்தார்

சுப்மன் கில் மிகவும் திறமையான ஒரு வீரர் அவரது ஆட்டத்தை பார்ப்பது அனாதியானது . இந்தப் போட்டியிலும் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தனது திறமையை மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறார் என பதிவிட்டு இருந்தார் . மேலும் அவர் விராட் கோலி முதல் இன்னிங்ஸில் அடித்த சதத்தையும் அந்தப் பதிவில் குறிப்பிட்டு இருந்தார் . ஆனாலும் ரசிகர்கள் விராட் கோலியை பற்றி கங்குலி குறிப்பிடவில்லை எனக்கூறி அவரை கடுமையாக விமர்சனம் செய்து வந்தனர் . பொதுவாக சமூக வலைதளங்களில் வரும் விமர்சனங்களுக்கு பதில் அளிக்காத கங்குலி இந்த முறை பதில் அளித்துள்ளார் .

- Advertisement -

இதுகுறித்து தனது கருத்தை பதிவு செய்திருக்கும் அவர் ” எல்லோருக்கும் மீண்டும் ஒருமுறை கூறிக் கொள்கிறேன் என்னுடைய பதிவை வைத்து பிளவை ஏற்படுத்த நினைப்பவர்களுக்கு ஆங்கிலம் தெரியும் என்று நினைக்கிறேன் அப்படி தெரியாதவர்கள் தயவுசெய்து ஆங்கிலம் தெரியாத யாராவது ஒருவரிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் என்று பதிவு செய்திருக்கிறார் .

விராட் கோலி டெஸ்ட் கேப்டன் பதவியை ராஜினாமா செய்ததிலிருந்து அவருக்கும் கங்குலிக்கும் இடையேயான உறவு சமூகமானதாக இல்லை . இந்த ஐபிஎல் தொடரின் டெல்லி மற்றும் பெங்களூர் அணிகள் மோதிய போட்டியில் இருவரும் கைகுலுக்கி கொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது . இரண்டாவது போட்டியின் போது தான் இருவரும் ஒருவருக்கொருவர் கைகுலுக்கி வாழ்த்துக்கள் தெரிவித்தனர் . தனது பதிவுகளின் மூலம் மீண்டும் கிளம்பிய புதிய சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் கங்குலி .