தன் தம்பி முசிர் கான் உடன் இணைந்து பேட்டிங் செய்வது குறித்து சர்ப்ராஸ் கான் பேசியிருக்கிறார். தற்போது நடைபெற்று வரும் விஜய் ஹசாரே தொடரில் மும்பை அணிக்காக இருவரும் கோவா அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார்கள்.
இந்த போட்டியில் மிகச் சிறப்பாக விளையாடிய சர்பராஸ் கான் வெறும் 75 பந்துகளை மட்டுமே சந்தித்து 157 ரன்கள் குவித்திருந்தார். இவருடைய தம்பி முசிர் கான் அரை சதம் அடித்திருந்தார். இவர்களுடைய பார்ட்னர்ஷிப் மற்றும் அதிரடியின் காரணமாக மும்பை 448 ரன்கள் எடுத்து போட்டியையும் வென்றது.
ஐபிஎல் வாய்ப்பு
கடந்த ஆண்டு பஞ்சாப் கிங்ஸ் அணி தம்பி முசிர் கானை அடிப்படை விளையாட 30 லட்சம் ரூபாய்க்கு வாங்கி இருந்தது. ஆனால் சர்ப்ராஸ் கானை எந்த ஒரு அணியும் வாங்கவில்லை. அவர் உள்நாட்டுத் தொடர்களில் மிகவும் அதிரடியாக விளையாடிய இருந்தாலும் ஐபிஎல் ஏலத்தில் விலை போகவில்லை.
இந்த நிலையில் சிஎஸ்கே அணி நடந்து முடிந்த மினி ஏலத்தில் 70 லட்சம் ரூபாய்க்கு அவரை ஏலத்தில் வாங்கியது. இந்த நிலையில் அவர் தற்போது சையத் முஸ்டாக் அலி தொடரில் மிகச்சிறந்த பேட்டிங் ஃபார்மில் இருந்து வருகிறார். மேலும் தன் தம்பியுடன் இணைந்து விளையாடுவது குறித்தும் பேசியிருக்கிறார்.
எனக்கு நிறைய கோபம் வரும்
இதுகுறித்து சர்பராஸ் கான் கூறும் பொழுது ” நாங்கள் இருவரும் சேர்ந்து விளையாடும் பொழுது ஒரு பவுலரை எப்படி எதிர்கொள்வது? எந்த இடத்தில் ரன் வேகத்தை அதிகரிப்பது? என பேசிக்கொண்டே இருப்போம். என் தம்பி விளையாடும் பொழுது என்னிடம் ஏதாவது சொல்லிக் கொண்டே இருப்பார். எனக்கு அது சில சமயங்களில் கோபத்தை உண்டாக்கும். ஆனால் அவர் சொல்வதை நான் சாதாரணமாக எடுத்துக் கொள்ள மாட்டேன்”
இதையும் படிங்க: கில்லை எதுக்காக நீக்கினீங்க.. அபிஷேக்கையும் தூக்கிடுங்க கபில்தேவுக்கு என்ன நடந்தது தெரியுமா? – யோக்ராஜ் சிங் விமர்சனம்
” கோவா அணிக்கு எதிரான போட்டியில் காலையில் பந்து வீச்சுக்கு சாதகம் இருந்ததால் எங்கள் துவக்க ஆட்டக்காரர்கள் பெரிய அதிரடியில் ஈடுபடவில்லை. எனவே நான் உள்ளே வரும் பொழுது ரன் விகிதம் குறைவாக இருந்தது. ஆடுகளம் உடைந்து பேட்டிங் செய்வதற்கு சாதகமாக மாறியும் இருந்தது. எனவே நான் இதை பயன்படுத்திக் கொண்டு அந்த போட்டியில் ரன்கள் எடுத்தேன்” என்று கூறியிருக்கிறார்.






