ரஞ்சிக்கோப்பையில் கலக்கிவிட்டார், ஆனால் ஏன் எடுக்கவில்லை? – சர்ப்ராஸ் கான் எடுக்கப்படாதது குறித்து வெளியான ரிப்போர்ட்!

0
442

ரஞ்சிக்கோப்பையில் கலக்கிய சர்ப்ராஸ் கான், ஏன் ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடர்களில் எடுக்கப்படவில்லை? – இதுகுறித்து ரிப்போர்ட் வெளியாகியுள்ளது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் முடிவடைந்து ஒருமாத ஓய்விற்கு பிறகு வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. இந்திய அணி அங்கு சென்று இரண்டு டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது

- Advertisement -

இந்த தொடரில் பங்கேற்கும் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுவிட்டது. இதில் இளம் வீரர்கள் ஜெய்ஸ்வால் மற்றும் ருத்துராஜ் இருவருக்கும் வாய்ப்புகள் கொடுக்கப்பட்டிருக்கிறது. ருத்துராஜ் ஒருநாள் மற்றும் டெஸ்ட் இரண்டு அணிகளிலும் இடம் பெற்றிருக்கிறார். ஆனால் ரஞ்சிக்கோப்பையில் அசத்திய சர்ப்ராஸ் கான் எடுக்கப்படாதது சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதற்கு பலரும் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

கடந்த மூன்று ரஞ்சிக் கோப்பை சீசனில் கிட்டத்தட்ட 2600 ரன்கள் அடித்திருக்கிறார் சர்ப்ராஸ் கான். 2019/20 சீசனில் 928 ரன்கள், 2021/22 சீசனில் 982 ரன்கள் மற்றும் 2022/23 சீசனில் 656 ரன்கள் அடித்திருக்கின்றார்.

ரஞ்சிக்கோப்பையில் அசத்திய இவரை ஏன் எடுக்கவில்லை? என்று ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் முன்னாள் இந்திய வீரர்கள் ஆகாஷ் சோப்ரா, சஞ்சய் மஞ்சுரேக்கர் போன்றோர் கேள்விகளை எழுப்பினர். சமூக வலைதளங்களில் பல்வேறு ரசிகர்களும் தொடர்ந்து இது குறித்து கேள்விகளை எழுப்பி வந்தனர்.

- Advertisement -

இந்நிலையில் ஏன் சார்ப்ராஸ் கான் எடுக்கப்படவில்லை? என்பது குறித்து பிசிசிஐ தரப்பிலிருந்து தகவல்கள் வந்திருக்கிறது.

சர்ப்ராஸ் கான் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடும் அளவிற்கு முழு உடல் தகுதியில் இல்லை. மேலும் மைதானத்திற்கு வெளியே அவரது நன்னடத்தையும் கேள்விக்குறியாக உள்ளது. இதன் நடவடிக்கையாக அவரை இப்போது எடுக்கவில்லை பிசிசிஐ அவரது சிறந்த செயல்பட்டை கவனித்து வருகிறது. அடுத்தடுத்த தொடர்களுக்குள் உடல்தகுதியையும் மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என பிசிசிஐ மூத்த அதிகாரி பத்திரிக்கைக்கு அளித்த தகவலில் கூறியுள்ளார்.