தற்போது இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு முன்பாக இந்திய அணி இரண்டாகப் பிரிந்து தங்களுக்குள் பயிற்சி போட்டியில் விளையாடி வருகிறார்கள். இதில் இந்திய அணிக்கு சாதகமும் பாதகமுமான இரண்டு விஷயங்களும் நடைபெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய ஏ அணி இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிராக இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது. இதைத்தொடர்ந்து இதில் பங்கேற்க முடியாத இந்திய வீரர்களுக்காக இந்திய அணியை இரண்டாகப் பிரித்து தற்பொழுது பயிற்சி போட்டி நடைபெற்று வருகிறது.
சர்பராஸ் கான் அசத்தல் பும்ரா சோகம்
இதில் இந்திய ஏ அணிக்காக விளையாடிய 27 வயதான இளம் வீரர் சப்ராஸ் கான் வெறும் 76 பந்தில் 15 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் உடன் அதிரடியாக சதம் அடித்து அசத்தினார். மேலும் இவர் இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 92 ரன்கள் எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியை தேர்வுக்குழு தலைவர் அகர்கர் மற்றும் பயிற்சியாளர் லட்சுமணன் இருவரும் பார்வையிட்டார்கள்.
மேலும் இதில் முக்கிய சோகமாக பும்ராவுக்கு விக்கெட் ஏதும் நேற்றைய நாளில் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சிராஜ் இரண்டு விக்கெட்டுகள் எடுத்த பொழுதிலும் ஓவருக்கு ஏழு ரன்கள் விட்டுக் கொடுத்தார். பிரசித் கிருஷ்ணா மட்டுமே சிக்கனமாக பந்து வீசி ஒரு விக்கெட் கைப்பற்றி இருக்கிறார்.
சாய் சுதர்சன் பேட்டிங்
இந்த நிலையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சாய் சுதர்சன் 60 பந்துகளில் 38 ரன்கள் எடுத்தார். அதே சமயத்தில் ருத்ராஜ் ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட் ஆனார். மேலும் வாஷிங்டன் சுந்தர் 35 ரன்கள் இஷான் கிஷான் 45 ரன்கள் எடுத்து நம்பிக்கை கொடுத்திருக்கிறார்கள். தற்போது இந்திய ஏ அணி 299 ரன்கள் எடுத்து இந்திய அணியை விட 160 ரன்கள் பின்தங்கி இருக்கிறது.
இதையும் படிங்க : 2025- 2027 WTC சைக்கிள்.. மொத்த நாடுகளின் டெஸ்ட் அட்டவணை.. அதிக போட்டியில் ஆடும் அணி எது?
மேலும் இந்த போட்டியில் முதலில் இந்திய அணிக்காக களம் இறங்கி விளையாடிய கேப்டன் கில் மற்றும் கே.எல் ராகுல் இருவரும் அரை சதங்கள் அடித்து இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியை பொறுத்தவரையில் இந்திய பேட்ஸ்மேன்களின் நிலை சிறப்பாக இருந்த போதிலும் இந்திய பந்துவீச்சாளர்களின் நிலை மோசமாக இருப்பது கவலை தருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.






