வரவிருக்கும் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடருக்கு முன்பு மூத்த வீரர்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோரின் அணியின் இடம்காக்கும் போராட்டம் மற்றும் அவர்களின் அனுபவத்தின் முக்கியத்துவம் குறித்து முன்னாள் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வீரர் முகமது கைப் ஆதரவாகப் பேசி இருக்கிறார்.
இந்திய அணியின் மூத்த நட்சத்திரங்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், அவர்கள் தங்கள் கடின உழைப்பினால் மட்டுமே அணியில் தொடர்ந்து இடம்பிடித்து வருவதாக கிரிக்கெட் வட்டாரங்கள் விவாதித்து வருகின்றன.
இதுகுறித்து முன்னாள் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு வீரர் முகமது கைப் பேசும்போது “யாரும் அவர்களுக்கு தட்டில் வைத்து எந்தப் பரிசும் கொடுக்கவில்லை, நியூசிலாந்துக்குச் சென்று அங்கே விளையாடி மகிழுங்கள் என்று யாரும் சொல்லவில்லை. அது அப்படி எளிதாக இருக்கவில்லை, அது ஒரு மிகவும் கடினமான கட்டமாகும், மேலும் அவர்கள் தங்கள் அனுபவத்தைப் பயன்படுத்திக் கொண்டனர். அந்த இங்கிலாந்து அணியின் ஆட்டத்தை நினைத்துப் பாருங்கள்? மக்கள் ‘ஓ, அவர் அவுட்டாகிவிட்டால் அவ்வளவுதான், இதுதான் அவரது கடைசி மேட்ச்’ என்று நினைத்தார்கள், ஆனால் அவர் அங்கே ஒரு செஞ்சரி அடித்தார்” என்று கூறி இருக்கிறார்.
மேலும் அவர் பேசுகையில் “39 வயதான ரோகித் சர்மா மீது அவர் சரியாக விளையாடவில்லை என்றால் மற்ற வீரர்களை உள்ளே கொண்டு வாருங்கள் என்ற மிகப்பெரிய பிரஷர் இருந்தது. ரோகித் சர்மாவுக்காக ‘அவருக்கு ஃபிட்னஸ் இல்லை, எப்படி 50 ஓவர்கள் ஒடிஐ விளையாடப் போகிறார்?’ என்றெல்லாம் பல பேச்சுகள் அடிபட்டன. ஆனால் அந்த மனிதர் ஒரு செஞ்சரியை அடித்தார், அதுவும் 50 ஓவர்கள் ஃபீல்டிங் செய்த பிறகு ஒரு செஞ்சரி அடித்தார்!” என்று கூறி இருக்கிறார்.






