பொளந்து கட்டிய சர்துல் தாகூர் ; ஈடன் கார்டனில் மாயாஜாலங்கள்!

0
373
KKR

ஐபிஎல் தொடரில் சில போட்டிகளை ரசிகர்களால் மறக்கவே முடியாது. அப்படி மறக்க முடியாத போட்டிகளில் ஒரு போட்டி இன்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு இடையே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது!

டாசில் தோற்று முதலில் பேட்டிங் செய்ய வந்த கொல்கத்தா அணிக்கு வழக்கம் போல துவக்கம் ஏமாற்றியது. வெங்கடேஷ் மூன்று ரன்னிலும், அடுத்து வந்த மந்திப் முதல் பந்திலேயே ரன் இல்லாமலும், கேப்டன் நிதிஷ் ரானா ஒரு ரன்னிலும் தொடர்ந்து வெளியேறினார்கள்.

- Advertisement -

மிகச் சிறப்பாக விளையாடிய ஆப்கானிஸ்தான் அணியின் வீரர் ரஹ்மானுல்லாஹ் குர்பாஷ் 44 பந்துகளில் 57 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். அடுத்து அதிரடி நாயகன் ரசல் வந்த முதல் பந்திலேயே விராட் கோலி இடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். அப்பொழுது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 11.3 ஓவர்களில் ஐந்து விக்கட்டுகள் இழப்பிற்கு 89 ரன்கள் எடுத்து பெரிய நெருக்கடியில் இருந்தது. 20 ஓவர்கள் முழுமையாக விளையாடி 150, 160 ரன்கள் எடுத்தால் பெரிய விஷயம் என்ற நிலைதான் இருந்தது.

அந்த நேரத்தில் சர்துல் தாகூர் களத்திற்குள் வந்தார். வந்தவர் முதல் பந்தில் ஆரம்பித்து தான் ஆட்டம் இழந்த 29 வது பந்து வரை அடிக்கும் மனப்பான்மையை விடவே கிடையாது. மிகச் சிறப்பாக விளையாடிய சர்துல் தாகூர் வெறும் 20 பந்துகளில் ஆறு பவுண்டரி மூன்று சிக்ஸர்கள் உடன் தனது முதல் ஐபிஎல் அரை சதத்தை பதிவு செய்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 29 பந்துகளில் 68 ரண்களை 9 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்கள் உடன் எடுத்து ஆட்டம் இழந்தார்.

சர்துல் தாக்கூர் மற்றும் ரிங்கு சிங் இருவரும் சேர்ந்து ஏழாவது விக்கட்டுக்கு 103 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார்கள். இவருக்கு பக்கபலமாக விளையாடிய ரிங்கு சிங் 33 பந்துகளில் இரண்டு பவுண்டரி மற்றும் மூன்று சிக்ஸர்கள் எடுத்து ஆட்டம் நடந்தால். 20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஏழு விக்கட்டுகள் இழப்பிற்கு 204 ரன்கள் குவித்தது.

- Advertisement -

சர்துல் தாக்கூர் தற்பொழுது அடித்த 68 ரன்கள், ஐபிஎல் தொடரில் ஏழாவது மற்றும் அதற்கு கீழே வந்து அடித்த ரண்களில் இரண்டாவது பெரிய அதிகபட்சமாக பதிவாகி இருக்கிறது. முதல் இடத்தில் ஆட்டம் இழக்காமல் 88 ரண்களை ரசல் சிஎஸ்கே அணிக்கு எதிராக எடுத்தது பதிவாகி இருக்கிறது. மூன்றாவது இடத்தில் டிவைன் பிராவோ 68 ரன்கள் மும்பைக்கு எதிராக எடுத்தது பதிவாகி இருக்கிறது!