இந்திய கிரிக்கெட்

எங்க உஸ்மான் தாரிக்குக்கு பயந்து .. பிசிசிஐ கடைசி நேரத்துல பிட்ச்சை கஷ்டமா மாத்திடுவாங்க – சக்லைன் முஸ்டாக் சர்ச்சை கருத்து

தற்போது டி20 உலகக் கோப்பை தொடரில் நவீன வசதிகளை பயன்படுத்தி இந்திய கிரிக்கெட் வாரியம் பாகிஸ்தான் விளையாடும் போட்டிகளின் ஆடுகளங்களை மாற்றிவிடும் என பாகிஸ்தான் முன்னாள் வீரர் சக்லைன் முஸ்டாக் குற்றச்சாட்டை வைத்திருக்கிறார்.

- Advertisement -

இவர் ஏற்கனவே பாகிஸ்தான் அணியில் நல்ல சுழல் பந்துவீச்சாளர்கள் இருப்பதால் வேகப் பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களை பிசிசிஐ ஐசிசி மூலம் பாகிஸ்தானுக்கு கொடுத்து இருக்கிறது என்ற குற்றச்சாட்டை முன் வைத்திருந்தார்.

உஸ்மான் தாரிக் பிரச்சனை

மேலும் தற்போது பாகிஸ்தான் சுழல் பந்துவீச்சாளர் உஸ்மான் தாரிக் பந்து வீசும் முறை பெரிய கவனத்தைப் பெற்று இருக்கிறது. இந்திய தரப்பிலிருந்து பலரும் அவர் பந்தை எறிவதாக கருத்து சொல்லி வருகிறார்கள். அதே சமயத்தில் இந்தியர்கள் அழுத்தத்தில் இருப்பதாக அவர் பதிலடி கொடுத்திருக்கிறார்.

இந்த நிலையில் உஸ்மான் தாரிக் விளையாட முடியாத அளவுக்கு ஆடுகளத்தை வேகப்பந்துவீச்சிக்கு சாதகமாக இந்திய கிரிக்கெட் வாரியம் ஐசிசியை வைத்து மாற்றிவிடும் என சக்லைன் முஸ்டாக் குற்றச்சாட்டை வைத்திருக்கிறார்.

- Advertisement -

பிசிசிஐ இதைச் செய்யும்

இதுகுறித்து அவர் பேசும் போது “இன்றைக்கு இருக்கும் நவீன வசதிகளையும், நவீன மைதான பராமரிப்பாளர்களையும் பார்த்தால், ஆடுகளத்தை தேவைக்கு தகுந்தது போல் உடனடியாக மாற்றி விட முடியும். எப்போது என்ன மாதிரியான மாற்றம் வரும் என்று சொல்ல முடியாது. ஐசிசி யாருடைய கட்டுப்பாட்டில் இருக்கிறது என்று சொல்லி தெரிய வேண்டியது இல்லை”

இதையும் படிங்க : பாகிஸ்தான் போட்டிக்கு தயார்.. நாங்க அந்த எல்லா விஷயத்தையும் பாத்துட்டு தான் இருக்கோம் – திலக் வர்மா பேட்டி

“தற்போதைய பாகிஸ்தான் பிளேயிங் லெவனில் இரண்டு வேகப்பந்துவீச்சாளர்கள் மற்றும் ஒரு வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் இடம்பெற வேண்டிய சூழ்நிலை வந்தால், உஸ்மான் தாரிக் விளையாட முடியாத நிலைமையை ஏற்பட்டுவிடும். இதற்கு வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தை இந்திய கிரிக்கெட் வாரியம் கொண்டு வந்து நமது திட்டத்தை மாற்றி விடும்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -
Published by