நடப்பு டி20 உலக கோப்பை தொடரில் பாகிஸ்தான் இலங்கையில் விளையாடும் எந்த போட்டிக்கும் சுழல் பதிவேற்றுக்கு சாதகமான ஆடுகளத்தை ஐசிசி மற்றும் பிசிசிஐ சேர்ந்து கொடுக்காது என பாகிஸ்தான் முன்னாள் வீரர் சக்லைன் முஸ்டாக் குற்றம் சாட்டி இருக்கிறார்.
இன்று பாகிஸ்தான் அணி நெதர்லாந்துக்கு எதிராக கொழும்பு சிங்கள தேசிய கிரிக்கெட் விளையாட்டு கழகத்தின் மைதானத்தில் விளையாடிக் கொண்டு வருகிறது. இங்கு 2010 ஆம் ஆண்டுக்கு பிறகு தற்போது தான் சர்வதேச போட்டி நடைபெறுகிறது. மேலும் இந்த போட்டிக்கு புல் இருக்கும்படியான ஆடுகளம் கொடுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் பொதுவாக ஆடுகாலங்கள் நன்றாக வறண்டு புல் ஏதும் இல்லாமல் சுழல் பந்துவீச்சு சாதகமாக இருக்கும். இலங்கை கிரிக்கெட் முழுக்க முழுக்க சுழல் பந்து வீச்சை மையமாக வைத்து விளையாடக் கூடியது. அவர்களிடம் காலம் காலமாக நல்ல வேகப்பந்துவீச்சாளர்களை விட நல்ல சுழல் பந்துவீச்சாளர்கள்தான் இருந்திருக்கிறார்கள்.
இந்த நிலையில் இன்று நெதர்லாந்து அணிக்கு எதிராக பாகிஸ்தான் விளையாடும் போட்டிக்கு ஆடுகளத்தில் புல் காணப்படுகிறது. இதைப் பார்த்த சக்லைன் முஸ்டாக் ஐசிசி மற்றும் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் மீது குற்றம்சாட்டி பேசி இருக்கிறார்.
இதுகுறித்து சக்லைன் முஸ்டாக் கூறும்பொழுது “ஐசிசி மற்றும் பிசிசிஐ ஒருபோதும் பாகிஸ்தானுக்கு சுழல் பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தை கொடுக்காது. இலங்கை ஆடு களத்தில் இதற்கு முன் நான் இவ்வளவு புல் இருந்து பார்த்ததில்லை” என்று கூறி இருக்கிறார்.
இதையும் படிங்க : கோலி கில் ஜெய்ஸ்வாலை விட சூரியவன்சி பெரிய பிளேயர்.. இப்படி ஒரு மகன் கிடைச்சதுக்கு நன்றி – ஹர்பஜன் சிங் பாராட்டு
இந்த நிலையில் டாஸ் நிகழ்வின்போது பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி ஆகா கூறும்பொழுது ” வானம் மேகமூட்டமான சூழ்நிலையுடன் வேகப்பந்து வீச்சிக்கு சாதகமாக காணப்படுகிறது. மேலும் ஆடுகளத்தில் புல் இருக்கிறது. இலங்கையில் இப்படி நான் பார்த்ததில்லை. எனவே ஆடுகளத்தில் இருக்கும் ஈரப்பதத்தை பயன்படுத்திக் கொள்ள முதலில் பந்து வீசுகிறோம்” என்று கூறியிருந்தார்.