கோலி கில் ஜெய்ஸ்வாலை விட சூரியவன்சி பெரிய பிளேயர்.. இப்படி ஒரு மகன் கிடைச்சதுக்கு நன்றி – ஹர்பஜன் சிங் பாராட்டு

0
4
Harbhajan

இந்திய அண்டர் 19 வீர வைபவ் சூரியவன்சி நட்சத்திர இந்திய வீரர்கள் விராட் கோலி, கில், ஜெய்ஸ்வாலை தாண்டி மிகச் சிறப்பான சாதனையை செய்திருப்பதாக ஹர்பஜன் சிங் பாராட்டி இருக்கிறார்.

நேற்று நடைபெற்ற அண்டர் 19 உலக கோப்பை இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக வைபவ் சூர்யவன்சி என்பது பந்துகளில் 175 ரன்கள் குவித்தார். இவரது அதிரடியான ஆட்டம் இந்திய அணியை உலகக் கோப்பையை வெல்ல வைத்தது.

- Advertisement -

வைபவ் சூர்யவன்சியின் சாதனை

இதுவரை வைபவ் சூரியவன்சி ஐ பி எல் முதல் அண்டர் 19 உலக கோப்பை வரையில் தான் விளையாடிய எல்லாவிதமான தொடர்களிலும் சதம் அடித்திருக்கிறார். உள்நாட்டு சிவப்பு பந்து தொடர் ரஞ்சி கிரிக்கெட்டிலும் அவர் சதம் அடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று முன் வரை அவர் முக்கியமான போட்டிகளில் பெரிய அணிகளுக்கு எதிராக ரன் அடிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு வைக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் அவர் நேற்று வலிமையான இங்கிலாந்து அணிக்கு எதிராக உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் 175 ரன்கள் குவித்து விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

- Advertisement -

சூரியவன்சி பெரிய வீரர்

இதுகுறித்து ஹர்பஜன்சிங் பேசும் பொழுது “இந்த உலகக் கோப்பையில் வைபவ் சூரியவன்சி இன்னொரு சாதனையை உருவாக்கி இருக்கிறார். அண்டர் 19 கிரிக்கெட்டில் இதுவரையில் 25 போட்டிகளில் 1412 ரன்கள் எடுத்திருக்கிறார். இது விராட் கோலி, கில் மற்றும் ஜெய்ஸ்வால் செய்யாத விஷயம். இந்தப் பட்டியலில் அவர் தற்போது முதல் இடத்தில் உள்ளார்”

இதையும் படிங்க: என் மகன் சூரியவன்சிக்கு பயமே கிடையாது.. சின்ன வயசுலயே சிங்கிள் எடுக்க மாட்டான் – தந்தை உற்சாக பேட்டி

“தற்போது அவருக்கு 14 வயதுதான் ஆகிறது. சர்வதேச கிரிக்கெட் விதிப்படி அவருக்கு 15 வயதாகியதும் இந்திய அணிக்குள் உடனே வந்து விடுவார். இப்படிப்பட்ட ஒரு திறமையான மகனைப் பெற்று உருவாக்கியதற்காக அவருடைய பெற்றோர்களுக்கு நான் நன்றி சொல்லிக் கொள்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -