என் மகனுக்கு எதிரா கேரள கிரிக்கெட்ல இருக்காங்க.. உண்மையில் நடந்தது இதுதான் – சஞ்சு சாம்சன் தந்தை பேட்டி

0
284
Sanju

கேரள கிரிக்கெட் சங்கத்தில் தனது மகன் சஞ்சு சாம்சனுக்கு எதிராக சிலர் செயல்படுவதாக அவரது தந்தை விஸ்வநாத் குற்றம் சாட்டி பேசி இருக்கிறார்.

தற்போது சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு சஞ்சு சாம்சன் தேர்வு செய்யப்படவில்லை. அவரை விஜய் ஹசாரே டிராபிக்கு கேரள கிரிக்கெட் சங்கம் தேர்வு செய்யாததுதான் இதற்கு காரணம் என கேரளாவில் பலரும் கேரள கிரிக்கெட் சங்கம் மீது குற்றச்சாட்டு வைத்து வருகிறார்கள்.

- Advertisement -

சஞ்சு சாம்சன் விவகாரத்தில் நடந்தது

இந்திய உள்நாட்டு ஒருநாள் கிரிக்கெட் தொடரான விஜய் ரசாரே டிராபிக்கு முன்பாக கேரள கிரிக்கெட் சங்கம் திருவனந்தபுரத்தில் 30 பேர் கொண்ட அணியை அறிவித்து பயிற்சி முகாம் ஒன்றை நடத்தியது. அந்த பயிற்சி முகாமுக்கு தன்னால் வர முடியாது என ஒற்றை வரியில் கேரள கிரிக்கெட் சங்க தலைவருக்கு சஞ்சு சாம்சன் மெசேஜ் அனுப்பி இருக்கிறார்.

இது கேரள கிரிக்கெட் சங்கத்தை கோபமடைய வைத்திருக்கிறது. இதைத்தொடர்ந்து சஞ்சு சாம்சனை தவிர்த்து விட்டு ஒரு புதிய அணியை அவர்கள் விஜய் ஹசாரே டிராபிக்கு அறிவித்தார்கள். பிறகு சஞ்சு சாம்சன் தான் செலக்சனுக்கு தயாராக இருப்பதாக தெரிவித்தார். ஆனால் கேரள கிரிக்கெட் சங்கம் தேர்வு செய்யவில்லை. இதன் காரணமாகவே அவரை பிசிசிஐ சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு தேர்வு செய்யவில்லை என கேரள கிரிக்கெட் சங்கத்தை கேரளாவில் இருக்கும் கிரிக்கெட் ரசிகர்கள் குற்றம் சாட்டி வருகிறார்கள்.

- Advertisement -

என் மகனுக்கு எதிராக இருக்கிறார்கள்

இதுகுறித்து சஞ்சு சாம்சன் தந்தை விஸ்வநாத் பேசும்பொழுது “கேரள கிரிக்கெட் சங்கத்தில் சிலர் என் மகனுக்கு எதிராக செயல்படுகிறார்கள். நாங்கள் இதற்கு முன்பு கேரள கிரிக்கெட் சங்கத்திற்கு எதிராக பேசவில்லை. தற்பொழுது தான் இப்படி எல்லாம் நடக்கிறது. மேலும் இந்த முறை அதிகமாகிவிட்டது. குறிப்பிட்ட அந்த பயிற்சி முகாமில் கலந்து கொள்ளாதது என் மகன் மட்டுமே கிடையாது. ஆனால் அப்படி கலந்து கொள்ளாதவர்கள் மேற்கொண்டு விளையாடினார்கள். ஆனால் என் மகனை மட்டும் தேர்வு செய்யவில்லை”

இதையும் படிங்க : பிசிசிஐ கேப்டன் ஜெர்சினு பெரிய தப்பு செய்யுது.. ஐசிசி நியாயம் தரணும் – பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு அதிகாரி பேச்சு

“இது கேரள கிரிக்கெட் சங்க தலைவர் ஜெயெஸ் ஜார்ஜ் மற்றும் செயலாளர் வினோத் பற்றியது கிடையாது. சில அற்ப மனிதர்கள் சில சாதாரண விஷயங்களை விஷமாக மாற்றுகிறார்கள். நாங்கள் விளையாட்டு வீரர்கள். என் மகனுக்கு விளையாட்டில் நியாயமான முறையில் வாய்ப்புகள் கொடுக்கப்பட வேண்டும் என்று கூறுகிறோம். மேற்கொண்டு இதில் ஏதாவது பேச வேண்டுமென்றால் நாங்கள் அதற்கு கலந்து பேச தயாராகவும் இருக்கிறோம்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -