தற்போது சாம்பியன்ஸ் டிராபி தொடர்பாக இந்திய கிரிக்கெட் வாரியம் செய்து வரும் செயல்கள் மிகவும் தவறானது என்றும், இதற்கு ஐசிசி நடவடிக்கை எடுத்து நியாயம் தர வேண்டும் என்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தரப்பில் கூறப்பட்டு இருக்கிறது.
இந்த முறை ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி பாகிஸ்தானில் நடைபெறுகிறது. ஆனால் இந்திய கிரிக்கெட் வாரியம் தங்கள் அணியை பாகிஸ்தான் அனுப்பி விளையாட மறுத்துவிட்டது. இறுதியாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஹைபிரிட் மாடலில் தொடரை நடத்த ஏற்றுக் கொண்டது. இந்திய அணி விளையாடும் போட்டிகள் நடைபெற இருக்கிறது.
மீண்டும் பிசிசிஐ தரும் பிரச்சனை
இதற்கு அடுத்து சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு முன்பாக வழக்கமாக கேப்டன்கள் சந்திக்கும் நிகழ்வு நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்வு பாகிஸ்தானில் வைத்து நடைபெற இருக்கிறது. இப்படியான நிலையில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவை பாகிஸ்தான் அனுப்புவதற்கு இந்திய கிரிக்கெட் வாரியம் மறுத்துவிட்டதாக செய்திகள் கூறுகிறது.
இது மட்டும் இல்லாமல் உச்சமாக தொடரை நடத்தும் கிரிக்கெட் வாரியத்தின் லோகோவை அணிகள் தங்களுடைய ஜெர்சியில் பதிய வேண்டும். இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் வாரியம் இதை செய்வதற்கும் மறுத்து வருவதாக செய்திகள் கூறுகின்றன. இதன் காரணமாக பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு மிகவும் அதிருப்தி அடைந்திருப்பதாக தெரிகிறது.
ஐசிசி நியாயம் செய்ய வேண்டும்
இது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு தரப்பில் தொலைக்காட்சியில் பேசியிருக்கும் அதிகாரி கூறும் பொழுது “இந்திய கிரிக்கெட் வாரியம் விளையாட்டில் அரசியலை கொண்டு வருகிறது. இது விளையாட்டுக்கு நல்லது கிடையாது. அவர்கள் தங்கள் அணியை பாகிஸ்தானுக்கு அனுப்ப சம்மதிக்கவில்லை மேலும் தற்போது அவர்களுடைய கேப்டனையும் பாகிஸ்தானுக்கு அனுப்ப விரும்பவில்லை. இப்போது தொடரை நடத்தும் கிரிக்கெட் வாரியத்தின் லோகோவையும் அவர்கள் ஜெர்சியில் பொரிக்க ஏற்றுக்கொள்ளவில்லை என்று தெரிகிறது”
இதையும் படிங்க : விராட் கோலி அந்த சம்பவத்துக்கு பிறகு.. என்னை ரொம்ப ஏமாத்திட்டார் – சவுரவ் கங்குலி கருத்து
“உலக கிரிக்கெட்டை கட்டுப்படுத்தும் அமைப்பான ஐசிசி இதை ஏற்றுக் கொள்ளாது என்று நாங்கள் நம்புகிறோம். மேலும் இதில் பாகிஸ்தானுக்கு என்ன நியாயமோ அதை ஐசிசி பெற்று தரும் என்றும் நம்புகிறோம்” என்று கூறியிருக்கிறார்.






