சாம்சனுக்கு வாய்ப்பு.. எதிர்பார்க்காத பிளேயிங் XI.. கம்பீரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்.. களமிறங்கும் இந்தியா

0
70
Surya

இன்று ஆசிய கோப்பை தொடரில் யுஏஇ அணிக்கு எதிரான போட்டியில் கம்பீர் யாரும் எதிர்பார்க்காத வித்தியாசமான ப்ளேயிங் லெவனை களம் இறக்கி அசத்தியிருக்கிறார்.

இந்த போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற இந்திய அணியின் கேப்டன் சூரியகுமார் யாதவ் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். ஆடுகளம் புதிதாக இருப்பதால் எப்படி செயல்படும் என்று தெரியாததால் பந்துவீச்சை தேர்ந்தெடுப்பதாக கூறியிருக்கிறார்.

- Advertisement -

சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு

இன்றைய போட்டியில் யாரும் எதிர்பார்க்காத வகையில் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. அதே சமயத்தில் மூன்றாவது இடத்தில் விளையாடும் திலக் வர்மாவும் இந்த போட்டியில் விளையாட இருக்கிறார். எனவே யாரை எந்த இடத்தில் விளையாட வைப்பார்கள் என்பது குறித்து இன்னும் தெரியவில்லை.

மேலும் இந்திய அணியில் அக்சர் படேல் குல்தீப் யாதவ் மற்றும் வருண் சக்கரவர்த்தி என மூன்று சுழல் பந்து வீச்சாளர்களும் இடம்பெற்று இருக்கிறார்கள். இதன் மூலம் யுஏஇ கண்டிஷனுக்கு வலிமையான சுழல் பந்துவீச்சு தாக்குதலை அமைத்திருக்கிறார்கள்.

- Advertisement -

எட்டாவது இடத்தில் பேட்டிங்

மேலும் இந்த போட்டியில் சிவம் துபே பிளையிங் லெவலில் மூன்றாவது வேகப்பந்துவீச்சாளராக இடம் பிடித்திருக்கிறார். இதன் காரணமாக அர்ஸ்தீப் சிங் இடம்பெறவில்லை. பும்ரா மற்றும் ஹர்திக் பாண்டியா இருவரும் இந்த வரிசையில் இடம் பெற்று இருக்கிறார்கள். மேலும் ரிங்கு சிங் விளையாட வாய்ப்பு கொடுக்கப்படவில்லை.

இதையும் படிங்க : ஷாகின் அப்ரிடி மாஸா திரும்ப வந்துட்டார்.. நேர்ல அந்த விஷயத்தை பார்த்தேன் – இந்திய அணிக்கு எச்சரிக்கை தரும் வாசிம் அக்ரம்

அபிஷேக் சர்மா, கில், திலக் வர்மா, சூரியகுமார் யாதவ், சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்டியா, சிவம் துபே, அக்சர் படேல், குல்தீப் யாதவ், வருண் சக்கரவர்த்தி மற்றும் பும்ரா.

- Advertisement -