என் மகன் சாம்சனின் கேரியரை.. தோனி விராட் ரோகித் அழிச்சாங்க.. தமிழக வீரர் பேசுனத தாங்க முடியல – சஞ்சு சாம்சன் தந்தை பேட்டி

0
647
Samson

தன் மகன் சஞ்சு சாம்சன் கிரிக்கெட் வாழ்க்கையை கேப்டன்களாக இருந்த மகேந்திர சிங் தோனி விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா மூவரும் அழித்துவிட்டதாக அவரது தந்தை கடுமையான குற்றச்சாட்டை முன் வைத்திருக்கிறார்.

2014 ஆம் ஆண்டு இந்திய அணியில் அறிமுகமான சஞ்சு சாம்சன் 10 வருடங்கள் கடந்த நிலையில்தான், பயிற்சியாளராக கம்பீர் மற்றும் கேப்டனாக சூர்யா இருக்கும் காலகட்டத்தில் தற்போது இந்திய அணியில் தனக்கென ஒரு சிறிய இடத்தை பிடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

என் மகன் கிரிக்கெட் வாழ்க்கையை அழித்த நான்கு பேர்

இதுகுறித்து குற்றச்சாட்டை முன்வைத்த சஞ்சு சாம்சன் தந்தை கூறும் பொழுது “என் மகனின் கிரிக்கெட் வாழ்க்கையை அழித்த மூன்று நான்கு பேர் இருக்கிறார்கள். கேப்டன்கள் தோனி ஜி,விராட் ஜி, ரோகித் சர்மா ஜி மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஜி. இந்த நான்கு பேரும் என் மகனின் கிரிக்கெட் வாழ்க்கையை 10 ஆண்டுகளாக அழித்துவிட்டார்கள். என் மகனைப் பெரிய அளவில் மனக்காயம் படுத்தினார்கள். என் மகன் வலிமையானவர் என்பதால் இதிலிருந்து மீண்டு வந்தார்”

“சஞ்சு சாம்சன் யாருக்கு எதிராக சதம் அடித்தார் பங்களாதேஷ் அணிக்கு எதிராகத்தானே? என்று கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் பேசியிருந்தார்.அவரை மக்கள் நல்ல வீரர் என்று கூறுகிறார்கள். ஆனால் அவர் பெரிய அளவில் விளையாடி நான் பார்த்ததே கிடையாது. அவர் பங்களாதேஷ் அணிக்கு எதிராக அதிகபட்சம் 28 ரன்கள்தான் எடுத்திருக்கிறார். ஆனால் என்னுடைய மகன் சதம் அடித்திருக்கிறார். எந்த அணிக்கு எதிராக சதம் அடித்தாலும் சதம் சதம்தான். இவருடைய பேச்சும் எங்களை காயப்படுத்தியது”

- Advertisement -

இவர்கள் இருவருக்கும் நன்றி

“தற்போது சஞ்சு சாம்சன் இருக்கும் நிலைக்கு நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். மேலும் கம்பீர் பாய் மற்றும் சூரியகுமார் பாய் இருவருக்கும் நான் நன்றி சொல்ல விரும்புகிறேன். இவர்கள் இருவரும் சஞ்சு சாம்சன் வாழ்க்கையில் வரவில்லை என்றால், கடந்த காலத்தைப் போலவே அணியில் இருந்து நீக்கி இருப்பார்கள். என் மகன் மறுபடியும் சதம் அடித்ததற்கான கிரெடிட் நான் இருவருக்கும் கொடுக்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க : ரிக்கி பாண்டிங் நீங்க விராட் விஷயத்துல மோசமா நடந்துக்கிட்டிங்க – பிரட் லீ அண்ணன் விமர்சனம்

சஞ்சு சாம்சனின் தந்தை டெல்லி காவல்துறையில் கான்ஸ்டபிள் ஆக இருந்தவர். இவரது பெயர் சாம்சன் விஸ்வநாத். மேலும் சந்தோஷ் டிராபி கால்பந்து தொடரில் டெல்லி அணிக்காக இவர் விளையாடியிருக்கிறார். தன் மகனின் கிரிக்கெட் வாழ்க்கைக்காக தன்னுடைய வேலையை விட்டுவிட்டு, கேரளா வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது!

- Advertisement -