சாம்சன் சிஎஸ்கேவுக்கு செட்டாக மாட்டார்.. அவர் ராஜஸ்தான் அணியில் இருந்து வெளியேற இதுவே காரணம் – முன்னாள் சிஎஸ்கே வீரர்

0
479

கடந்த ஏப்ரல் மாதத்தில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் மிடில் வரிசை பேட்ஸ்மேன் ரியான் பராக் பாதி போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டார்.

இந்த சூழ்நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் தன்னை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து விடுவிக்க கூறியது குறித்து முன்னாள் சிஎஸ்கே கிரிக்கெட் வீரர் சுப்பிரமணியம் பத்ரிநாத் சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.

- Advertisement -

தற்போது நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக இருந்த சஞ்சு சாம்சன் காயம் காரணமாக பாதி போட்டிகளில் இருந்து விளையாடாத காரணத்தால் அதற்கு பதிலாக ரியான் பராக் கேப்டன் பொறுப்பை ஏற்று அணியை வழி நடத்தினார். இந்த சூழ்நிலையில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் தொடருக்கு ரியான் பராக் கேப்டனாக தொடர வேண்டும் என ராஜஸ்தான் நிர்வாகம் விரும்புவது போல தெரிகிறது.

இந்த சூழ்நிலையில் தன்னை அணியில் இருந்து விடுவிக்க சாம்சன் வேண்டுகோள் விடுத்திருக்கும் நிலையில் அவர் சென்னை அணிக்கு வந்தால் தோனிக்கு பதிலாக சரியான மாற்றுவீராக இருக்கும் என பல முன்னாள் வீரர்கள் கூறி வருகின்றனர். ஆனால் சாம்சன் சிஎஸ்கே அணிக்கு செட்டாக மாட்டார் என அதற்கான காரணத்தை முன்னால் இந்திய கிரிக்கெட் வீரர் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரரான சுப்ரமணியம் பத்ரிநாத் கூறியிருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது ” சாம்சன் ராஜஸ்தான் அணியில் இருந்து வெளியேற ரியான் பராக் தான் காரணம் என்று நினைக்கிறேன். அவரை கேப்டன் பதவிக்கு கருத்தில் கொண்டால் சாம்சன் போன்ற ஒருவர் எப்படி அணியில் நீடிக்க முடியும்? என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள். சாம்சன் சென்னை அணியில் தோனிக்கு மாற்றுவீராக இருப்பார். அவர் பேட்டிங்கில் முதல் மூன்று அல்லது நான்கு இடங்களில் பேட்டிங் செய்யக்கூடிய ஒரு வீரர்.

இதையும் படிங்க:பிரித்வி ஷா தவறான பாதையை தேர்ந்து எடுத்தார்.. ரோகித் சர்மாவின் சிறு வயது பயிற்சியாளர் பரபர புகார்

அவர் விளையாடும் லெவன் அணியில் ஐந்தாவது அல்லது ஆறாவது இடத்தில் பொருந்தக்கூடிய ஒரு வீரர் அல்ல. அந்த வரிசையில் சிஎஸ்கே வலுவாக உள்ளது. மாத்ரே உறுதியாக இருக்கிறார், கேப்டன் ருத்ராஜ் மேல் வரிசையில் வலுவாக திகழ்கிறார், அதேபோல பிரவீஸ் மிடில் வரிசையில் கம்பீரமாக இருக்கிறார். குஜராத் அணியில் இருந்து ஹர்திக் பாண்டியாவை வாங்க மும்பை அணி ட்ரேடிங் செய்தது போல சென்னை அணி செய்யுமா? என்று தெரியாது. ஆனால் அப்படி ஒருவேளை அவரை வாங்கினால் பிளேயிங் லெவனில் விளையாட வைக்க முடியுமா? என்பது கேள்விக்குறியாக உள்ளது என அவர் பேசி இருக்கிறார்.

- Advertisement -