இவர் மட்டும் இன்னைக்கு இல்லனா நான் இங்க நின்னு பேச முடியாது.. எங்க பிளான் இதுதான் – சஞ்சு சாம்சன் பேட்டி

0
15
Sanju

இன்று டி20 உலகக் கோப்பை இரண்டாவது செமி பைனலில் பரபரப்பான போட்டியில் 7 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா இங்கிலாந்து வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இந்த போட்டியில் ஆட்டநாயகன் விருது வென்ற சஞ்சு சாம்சன் வெற்றி குறித்து பேசி இருக்கிறார்.

இந்த போட்டியில் டாஸ் தோற்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி ஏழு விக்கெட் இழப்புக்கு 253 ரன்கள் எடுத்தது. சஞ்சு சாம்சன் 42 பந்தில் 89 ரன்கள் எடுத்தார். இதைத்தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணி கடைசி வரையில் போராடி ஏழு விக்கெட் இழப்புக்கு 246 ரன்கள் எடுத்தது. ஜேக்கப் பெத்தேல் 48 பந்தில் 15 ரன்கள் எடுத்தார். இறுதியில் ஏழு ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

- Advertisement -

நான் இதையே முடிவு செய்தேன்

இந்த போட்டி குறித்து பேசி உள்ள சஞ்சு சாம்சன் கூறும் பொழுது ” உண்மையைச் சொன்னால் கடந்த போட்டியில் எனக்கு நல்ல ஃபார்ம் கிடைத்தது. அதை நான் இந்த போட்டிக்கும் எடுத்துச் செல்ல வேண்டும் என்று நினைத்தேன். பெரிய போட்டிகளில் ஃபார்ம் திரும்பி வருவது சாதாரண விஷயம் இல்லை. எனவே எனது பேட்டிங்கை முழுமையாக அணிக்கு பயன்படுத்த முடிவு செய்தேன்”

“அதற்காக எனக்கு கொஞ்சம் நான் நேரம் கொடுத்துக் கொண்டேன். கொஞ்சம் திட்டமிட்டு விளையாடினேன். நான் தயாராக இருந்தேன் விஷயங்களும் சரியாக நடந்தது. மேலும் எனக்கு ஆரம்பத்தில் கொஞ்சம் அதிர்ஷ்டமும் இருந்தது. மேலும் இந்த மைதானத்தில் 250 ரன்கள் இருந்தாலும் போதாது என்று எங்களுக்கு தெரியும். அபிஷேக் அவுட் ஆன பிறகு இந்த இலக்கை நோக்கி பயணிக்க வேண்டும் என முடிவு செய்தேன்”

- Advertisement -

இவர்தான் முக்கியமானவர்

“நானும் கிஷானும் சேர்ந்து விளையாடிக் கொண்டிருந்த பொழுது 250 ரன்கள் தேவை என்று உணர்ந்தேன். வெளியில் இருந்த அணி நிர்வாகமும் இதே ஸ்கோர் வேண்டும் என்று நினைத்தார்கள். நாங்கள் இங்கு நிறைய கிரிக்கெட் விளையாடி உள்ளதால் எந்த ஸ்கோரும் இங்கு போதாது என்று தெரியும்”

இதையும் படிங்க : எங்களுக்கு தேவையானதை இங்கிலாந்து கொடுத்துட்டாங்க.. நாங்க இதுக்கு தயாரா இருக்கோம் – சூரியகுமார் பேச்சு

“மிக முக்கியமாக பும்ரா உலகத்தரமான பவுலர். அவர் கடைசியில் வீசிய இரண்டு ஓவர்கள் மிகவும் முக்கியமானது. அவர் மட்டும் இல்லாமல் இருந்தால் நான் இங்கு நின்று பேசிக் கொண்டிருக்க முடியாது. இந்த வெற்றிக்கு மிக முக்கியமான காரணமாக அவர் இருக்கிறார்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -