இன்று மும்பை வான்கடே மைதானத்தில் இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரின் இரண்டாவது செமி பைனலில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
இந்த மும்பை மைதானத்தில் இரண்டாவது பந்து வீசும் போது பனிப்பொழிவு வரும் என்கின்ற அச்சம் இருந்தது. ஆனால் பெரிய அளவுக்கு பனிப்பொழிவு வராது என்று வெளியில் இருந்து கூறப்படுகிறது.
அணியில் மாற்றம்
இங்கிலாந்து அணி தங்கள் கடைசி போட்டியில் ரேகான் அகமத்தை உள்ளே கொண்டு வந்து ஜெமி ஓவர்டனை வெளியே அனுப்பி இருந்தது. இந்த நிலையில் தற்போது ரேகா அகமத்தை நீக்கிவிட்டு ஓவர்டன்னுக்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறார்கள்.
இந்திய அணியை பொறுத்தவரையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக களம் இறங்கிய அதே அணி இன்றைய போட்டியிலும் விளையாடுகிறது. கூடுதல் வேகப் பந்துவீச்சாளரை அணியில் சேர்க்கும் திட்டத்தை கம்பீர் நிராகரித்திருக்கிறார்.
சூரியகுமார் தகவல்
இன்று போட்டிக்கு முன்பாக பேசியிருந்த இந்திய பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்கல் மும்பையில் நடைபெறும் போட்டியில் பனிப்பொழிவு ஒரு கவலைக்குரிய விஷயமாக இருக்கும் என்று கருத்து தெரிவித்திருந்தார். அதற்கேற்றது போல இந்திய அணி தற்போது டாஸ் தோற்று இரண்டாவது பந்து வீச உள்ளது.
இதையும் படிங்க : அமீர் அளவுக்கு நான் இறங்க விரும்பல.. நம்ம அளவுக்கு அவங்களால வரவே முடியாது.. ஒரு சம்பவத்தை சொல்றேன் – முகமது கைப் விமர்சனம்
இதுகுறித்து சூரியகுமார் யாதவ் பேசும் பொழுது “நாங்களே முதலில் பேட்டிங் செய்வதற்குதான் எதிர்பார்த்தோம். ஏனென்றால் செமி பைனல் என்பது பெரிய போட்டி முதலில் அழுத்தம் இல்லாமல் பேட்டிங் செய்யலாம். மேலும் காற்று தற்போது வேகமாக அடித்துக் கொண்டிருக்கிறது எனவே இரவில் பனிப்பொழிவு வராது என்று நம்புகிறேன். இந்த ஆடுகளத்தை சிறப்பாக உருவாக்கியவர்களுக்கு பாராட்டுகள்” என்று கூறியிருக்கிறார்.






