இந்திய கிரிக்கெட்

உன்ன டீம்ல இருந்து தூக்கிடுவேன்.. ஆனா அதுக்கு அது நடக்கணும்னு கம்பீர் சொன்னார் – சஞ்சு சாம்சன் பேச்சு

இந்திய டி20 அணிக்கு திரும்பிய பிறகு கேப்டன் மற்றும் பயிற்சியாளர் இருவரும் தனக்கு எப்படியான ஆதரவை கொடுத்தார்கள் என சஞ்சு சாம்சன் தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -

சஞ்சு சாம்சன் 2015 ஆம் ஆண்டு இந்திய டி20 அணியில் அறிமுகமானார். அதற்குப் பிறகு சில வாய்ப்புகளை அவர் பெற்ற போதும் நிரந்தரமான வாய்ப்பு அவருக்கு இந்திய அணியில் கிடைக்கவில்லை. கம்பீர் பயிற்சியாளராகவும் சூரியகுமார் யாதவ் கேப்டன் ஆகவும் வந்த பிறகு அவருக்கு நீண்ட வாய்ப்பு இந்திய டி20 அணியில் கொடுக்கப்பட்டது.

இது சாதாரணமில்லை

இதுகுறித்து சஞ்சு சாம்சன் பேசும்பொழுது “நான் இந்திய அணியில் இருந்து நீண்ட காலமாக விலகி இருந்தேன். உண்மையைச் சொன்னால் அது எளிதானதாக இல்லை. இந்த மாதிரியான நிச்சயமற்ற உணர்வை சுமந்து கொண்டு இருப்பது சாதாரணமில்லை. நான் இந்திய அணியில் வாய்ப்பு பெற்று 8, 9 ஆண்டுகளில் மொத்தம் 15 போட்டிகள் மட்டுமே விளையாடி இருந்தேன்”

“நான் இந்திய அணியில் இருந்தேன் ஆனால் இல்லை. நான் எப்போதும் என்னை நேர்மறையான எண்ணத்தில் வைத்திருப்பதற்கு முயற்சி செய்தேன். நான் மீண்டும் இந்திய திரும்ப முடியும் என்று நம்பினேன். இங்கு ஒவ்வொரு வீரருக்கும் வித்தியாசமான முறையில் தனித்தனியான பயணங்கள் இருக்கிறது. எனவே எப்போது வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்”

- Advertisement -

21 டக் அவுட் ஆக வேண்டும்

“இந்த நிலையில் துலீப் டிராபியில் விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது சூரியகுமார் யாதவ் எனக்கு நீண்ட ஒரு வாய்ப்பை கொடுப்பதாகவும் 7 போட்டிகளில் விளையாட முடியும் என்றும் சொன்னார். எனக்கு அது நம்பிக்கையை கொடுத்தது. ஆனால் இலங்கை அணிக்கு எதிராக கிடைத்த இரண்டு வாய்ப்பிலும் நான் டக் அவுட் ஆனேன்”

இதையும் படிங்க : என் பந்தை 14 வயசு பையன் சூரியவன்சி ஆடின விதம்.. 18 வருஷ அனுபவத்துல பாக்கல – அஸ்வின் பாராட்டு

“அப்போது நான் ஓய்வறையில் மிகவும் சோகமாக அமர்ந்திருந்தேன். அங்கு வந்த கம்பீர் என்னிடம் ஏன் இப்படி இருக்கிறாய் என்று கேட்டார். நான் அதற்கான காரணத்தை சொன்னேன். அதற்கு அவர் நான் உன்னை அணியை விட்டு நீக்குவேன் ஆனால் நீ 21 முறை தொடர்ந்து டக் அவுட் ஆனால் மட்டுமே நீக்குவேன் என்று சொன்னார். கேப்டனும் பயிற்சியாளரும் தந்த நம்பிக்கைதான் என்னை அடுத்து சிறப்பான முறையில் செல்ல வைத்தது” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -
Published by