இந்திய கிரிக்கெட்

தோல்வியை ஏத்துக்கிறேன்.. இந்திய பவுலர்களை இந்த ஒரு விஷயத்துக்காக நான் பாராட்டுகிறேன் – ஷாய் ஹோப் கருத்து

​இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இடையிலான கிரிக்கெட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த பிறகு, அந்த அணியின் கேப்டன் ஷாய் ஹோப் போட்டி குறித்துப் பேசிய கருத்துக்கள் கிரிக்கெட் உலகில் கவனத்தைப் பெற்றுள்ளன. ஆட்டத்தின் வெற்றி தோல்வியைத் தீர்மானித்த சிறிய வித்தியாசங்கள், பந்துவீச்சில் விட்ட தவறுகள் மற்றும் இந்திய பந்துவீச்சாளர்களின் சிறந்த எக்ஸிகியூஷன் ஆகிய விஷயங்களை அவர் விரிவாகப் பகிர்ந்துள்ளார்.

- Advertisement -

​இதுகுறித்து வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஷாய் ஹோப் பேசும்போது “பல விஷயங்களைச் சுட்டிக்காட்ட முடியும், ஆனால் இது சிறிய வித்தியாசங்கள் கொண்ட மற்றொரு கிரிக்கெட் மேட்ச். நீங்கள் கவனிக்கும் சிறிய விஷயங்கள்தான் நீங்கள் வெற்றி பெறும் அணியாக மாறப் போகிறீர்களா அல்லது தோல்வி அடையும் அணியாக மாறப் போகிறீர்களா என்பதைத் தீர்மானிக்கும் தருணங்களாக இருக்கக்கூடும். பந்துவீச்சில் இன்னும் கொஞ்சம் சிறப்பாக எக்ஸிகியூட் செய்திருக்கலாம், சர்பேஸை இன்னும் கொஞ்சம் பயன்படுத்தியிருக்கலாம், பவுண்டரிகளில் சில ரன்களை விட்டுக் கொடுத்துவிட்டோம். எந்த ஒரு மேட்சின் கடைசி கட்டத்திலும் இந்தச் சிறிய வித்தியாசங்கள்தான் தீர்மானிக்கும் காரணியாக இருக்கும்” என்று கூறி இருக்கிறார்.

​தொடர்ந்து அவர் பேசுகையில் “இந்திய அணி அதிரடியாகத் தொடங்கிய பிறகு நாங்கள் ஆட்டத்திற்குள் திரும்பி வந்தது பாராட்டுக்குரியது. ரோஸ்டன் தன் வேலையைச் சிறப்பாகச் செய்து விக்கெட்டுகளை எடுத்தார், பின்னர் மற்ற வீரர்களும் சிறப்பாக முடித்து இந்த ஸ்கோரை சேஸ் செய்வதற்கான நல்ல வாய்ப்பை நமக்கு ஏற்படுத்தித் தந்தார்கள். பவர்பிளே ஓவர்களில் விக்கெட்டுகளை இழப்பது எப்போதுமே உங்களைப் பின்னுக்குத் தள்ளிவிடும். டாப் ஆர்டரில் ஒரு நல்ல பார்ட்னர்ஷிப்பை உருவாக்க வேண்டும், அந்த அடித்தளம் அமைந்தால் மிடில் பகுதியில் வரும் வீரர்களுக்கு எப்போதுமே அது எளிதாக இருக்கும்” என்று கூறி இருக்கிறார்.

​மேலும் அவர் கூறுகையில் “ஒன்று இரண்டு வீரர்களை மட்டும் இதற்காகக் குறை சொல்ல முடியாது, இது ஒரு கலெக்டிவ் பேட்டிங் யூனிட், இன்று அது நமக்கு அமையவில்லை. இருப்பினும் சிறிய வித்தியாசம்தான், 14 ரன்கள் இங்கே அங்கே மாறியிருந்தால் நாங்களே மீண்டும் வெற்றி பெற்றிருக்கக்கூடும். வறண்ட சூழ்நிலை ஆட்டத்தில் பங்கு வகித்தது, அர்ஷ்தீப் சிங் தனது இரண்டாவது மற்றும் மூன்றாவது ஓவரை வீசியபோது பந்து நன்றாக டைல் ஆகத் தொடங்கியது. வறண்ட சூழ்நிலைகளில் வேரியேஷன்கள் அதிகமாகக் கிடைக்கும், பேட்டிங் செய்யும்போது இது எப்போதுமே கடினமாக இருக்கும்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -

​இறுதியாக அவர் பேசுகையில் “இந்திய பந்துவீச்சாளர்கள் சிறப்பாகப் பந்துவீசினார்கள், அவர்களுக்கு நாம் கிரெடிட் கொடுக்க வேண்டும். அவர்கள் சரியான யார்க்கர் பந்துகளை எக்ஸிகியூட் செய்து காட்டினார்கள்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -
Published by